LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

பாகற்காய் குழம்பு (Bitter Gourd Gravy)

தேவையானவை:

பாகற்காய் - 2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகாய்த்தூள் -‍ ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் ‍- ஒரு டீஸ்பூன்
சர்க்கரை ‍- ஒரு டீஸ்பூன்
புளி பேஸ்ட் - அரை  டீஸ்பூன்
கடுகு - அரை  டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு -‍ தேவையான அளவு
எண்ணெய் ‍- 3 டீஸ்பூன்

அரைக்க தேவையானவை:

தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

1.பாகற்காயை நீளவாக்கில் நன்றாக வெட்டி, சிறு சிறு துண்டுக‌ளாக நறுக்கி வைக்கவும்.பிறகு வெங்காயம் , தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள‌வும்.நறுக்கிய பாகற்காய் துண்டுகளுடன், சிறிது உப்பு சேர்த்து கையால் நன்கு கலந்து ஒரு அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.


2.கசகசா தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு மைய அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.புளியை சிறிது தண்ணீரில் போட்டு கரைத்து வைக்கவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் அதில் உப்பு கலந்து வைத்த பாகற்காய் துண்டுகளை கையால் பிழிந்து, தண்ணீரை வடித்துவிட்டு அதை வாணலியில் போட்டு நன்கு வதக்கவும்.

3.பாகற்காய்முக்கால் பாகம் வெந்ததும், அதை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட்டு, மீண்டும் அதே வாணலியை அடுப்பில் வைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.வெங்காயம் நிறம் மாறியதும், மஞ்சள்தூள் சேர்த்து அதனுடன் தக்காளியையும் போட்டு மேலும் வதக்கவும். வெங்காயம், தக்காளி எல்லாம் நன்கு வதங்கியதும், எல்லா தூள் வகைகளையும் கலந்து, உப்பு சேர்த்து ஒருமுறை வதக்கவும்.

4.மேலும் இதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது, கரைத்து வைத்த புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.எல்லாம் சேர்ந்து, கொதி வந்த நிலையில், ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் பாகற்காய் துண்டுகளை போட்டு, சர்க்கரையையும் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.இப்போது, சுவையான பாகற்காய் பிரட்டல் தயார்.

Bitter Gourd Gravy

Ingredients for Bitter Gourd Gravy:

Bitter Gourd-2

Onion-1

Tomato-1

Chilly Powder-1tsp

Coriander Powder-1tsp

Turmeric Powder-1tsp

Sugar-1tsp

Tamarind Paste-1/2tsp

Mustard-1/2tsp

Asafoetida-1Pinch

Curry Leaves-Little

Salt-ad Needed

Oil-3tsp

 

Ingredients for Grinding:

 

Grated Coconut-3tbsp

Poppy Seed-1tsp

 

Procedure to make Bitter Gourd Gravy:

 

1. Cut bitter gourd lengthly and chopped in to small pieces. Chop onion and tomatoes finely. Mix bitter gourd along with salt and soak for half an hour.

2. Make a fine paste of poppy seed and grated coconut along with water. Mix tamarind in water to get tamarind juice. Heat oil in a pan, now drain the bitter gourd and put in pan and saute well.

3. When bitter gourd is half cooked, transfer in to another vessel and keep aside. Put the same pan on flame, heat oil and then add mustard, asafoetida, curry leaves, onion and fry well. when onion turns color, add turmeric powder, tomato and fry finely. Now put all masala ingredients along with salt and fry again.

4. Then add grinded coconut paste, tamarind juice and allow to boil well. When boiling, add fried bitter gourd pieces, sugar and cook for 5 minutes. Now tasty bitter gourd gravy is ready.

 

 

by   on 02 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.