LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

பாகற்காய் புளிக்குழம்பு (Bitter Gourd Tamarind Gravy)

தேவையானவை :


பெரிய பாகற்காய் - இரண்டு

சின்ன வெங்காயம் - 50 கிராம்

தக்காளி - இரண்டு

பூண்டு - 5 பல்

புளி - ஒரு சிறிய எலுமிச்சையளவு

உப்பு - 2 1/2 டீஸ்பூன்

எண்ணை - இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு மற்றும் உளுந்து - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - இரண்டு

சோம்பு - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

வெல்லம் - சிறிய கட்டி

மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்

சோம்புத் தூள் - அரை டீஸ்பூன்



செய்முறை


1.முதலில் சற்று கணமான வில்லைகளாக நறுக்கிய பாகற்காயை அரை டீ ஸ்பூன் உப்பு சேர்த்து பிசறி 10 நிமிடம் வைக்கவும்.பூண்டுப் பல்லை தட்டி வைக்கவும்.தக்காளியை நான்காகவும், பச்சை மிளகாய், வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கவும்.

2.இரண்டு டம்ளர் தண்ணீரில் புளியை  கரைத்து வடிகட்டி வைக்கவும்.பாகற்காயை கழுவி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சோம்புத் தூள், இரண்டு ஸ்பூன் உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு மற்றும் உளுந்து, சோம்பு வெடிக்க விட்டு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி, பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

3.மூன்று நிமிடத்திற்கு பிறகு காய் கலவையை சேர்த்து வதக்கவும்.ஐந்து நிமிடம் நன்கு வதக்கி புளிக் கரைசலை ஊற்றவும்.10 நிமிடம் நன்கு கொதித்து காயும் நன்றாக வெந்தவுடன் வெல்லம் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

Bitter Gourd Tamarind Gravy

Ingredients for Bitter Gourd Tamarind Gravy:

 

Big Bitter Gourd-2

Small Onion-50 G

Tomato-2

Garlic-5 Flakes

Tamarind-Small Lemon Size

Salt-2 1/2 Tsp

Oil-2 Tbsp

Mustard, Black Gram-1 Tsp

Green Chilly-2

Fennel-1/4 Tsp

Curry Leaves-2 Bunch

Jaggery-Small Piece

Chilly Powder-1 Tbsp

Coriander Powder-1 Tsp

Turmeric Powder-1 Tsp

Fennel Powder-1/2 Tsp

 

Procedure to make Bitter Gourd Tamarind Gravy:

 

1. Mix the chopped bitter gourd along with 1/2 tea spoon of salt and allow marinate for 10 minutes. chop the garlic flakes. Cut the tomatoes into 4 slices and the onion into 2.

2. Mix the tamarind in 2 cup of water. Wash the bitter gourd and mix along with chilly powder, coriander powder, fennel powder and 2 tea spoons of salt. Heat oil in a pan, add mustard, black gram and fennel and let to splutter. Add onion, garlic, green chilly, curry leaves and saute till get golden color and then add tomatoes.

 3. After 3 minutes, add the vegetables and saute well. Fry for 5 minutes and then add tamarind juice. Allow 10 minutes to boill well, add jaggery and let to boil for 5 minutes and then remove from flame.

 

 

 

by rakavi   on 19 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.