LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

கழுத்தின் பின்புறம், முழங்கால், கணுக்கால் கருமை போகணுமா?

நல்ல சிவந்த நிறத்தை உடையவர்களுக்குக் கூட முழங்கை, முழங்கால், கணுக்கால், கழுத்தின் பின்புறம் கருமை படர்ந்து இருந்திருக்கும். எத்தனையோ சிகிச்சை எடுத்தும் எளிதாக நிறம் மாறாது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இந்த கருமையான இடங்களை நிறம் மாறச் செய்யலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.


எலுமிச்சை, வினிகர் எலுமிச்சையை சரிபாதியாக நறுக்கி சருமத்தில் கருமை படர்ந்துள்ள இடங்களில் தேய்த்து ஊறவைத்து கழுவலாம். எலுமிச்சை சாறுடன் பாலாடை, வெள்ளரிக்காய் சாறு அல்லது மஞ்சள்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து ஊறவைத்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.


வெள்ளரிக்காய் சாறு, மஞ்சள் தூள், வினிகர் கலந்து கணுக்கால் பகுதியில் தேய்த்து அரை மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் எலுமிச்சையால் தேய்த்து கழுவ கருமை படிப்படியாக மறையும். ஒருமாதத்திற்கு தொடர்ந்து இதனை செய்யவேண்டும்.


யோகர்டு பேஸ்ட் 3 ஸ்பூன் யோகர்டுடன் சில துளிகள் வினிகர் சேர்த்து கலந்து கால் முட்டியில் கருமை உள்ள பகுதிகளில் தேய்த்து ஊறவைக்கவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.
கடலைமாவு 2 ஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு, பால் 2 ஸ்பூன் கலந்து பேஸ்ட் போல கலக்கவும். இதனை முட்டிப் பகுதிகளில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும். குளிர்ந்த நீரில் கழுவ கறுமை மறையும். வறண்ட தோல் மென்மையாகும். பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் நன்றாக அரைத்து கை, கால் முட்டிப் பகுதிகளில் தேய்க்கவும். கருமை மறையும்.


பசும் மஞ்சள், தயிர் பசும் மஞ்சள் நல்ல மணத்தைத் தரும். எல்லா வயதினரும் எந்த வகை சருமத்தினரும் உபயோகிக்க உகந்தது. பசும் மஞ்சளை அரைத்து தயிரில் கலந்து கொள்ளவும்.அந்த கருமையான பகுதிகளில் இந்த விழுதை தடவவும். அரை மணி நேரம் ஊற விட்டு, பிறகு குளிக்கவும். இப்படியே செய்து வந்தால் கருமை மறைவதை கண்கூடாகப் பார்க்கலாம்.வறண்ட சருமத்திற்கு மிகச் சிறந்த சிகிச்சை இது. பசும் மஞ்சளைக் அதன் இலையோடு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.


அதோடு பாசிப் பயறு மாவைக் கலந்து பசைப் போல குழைத்துக் கொள்ளவும். இந்த விழுதை தினமும் பூசிக் குளித்தால் தோலில் கருமை உள்ள பகுதிகள் படிப்படியாக மறையும். பசு‌ம் ம‌ஞ்சளை அரை‌த்து உட‌லி‌ல் தட‌வி‌‌க் கு‌ளி‌த்தா‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி பிறக்கும்.


வைட்டமின் இ வைட்டமின் இ எண்ணெய் மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த எண்ணெயை கருமை உள்ள பகுதிகளில் பூசி ஊறவைத்து வெந்நீரில் குளிக்கலாம். கற்றாழைச் செடியை புதிதாக பறித்து அதை முட்டிக்கால், கணுக்கால் பகுதிகளில் கருமை உள்ள இடங்களில் தேய்த்து குளிக்கலாம்

by Swathi   on 09 Apr 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.