LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- மூலம் (Piles)

மலம் வரும் போது வரும் ரத்தம் நிற்க - ஆயுர்வேத மருத்துவம்


ரத்தம் தாதுக்களுக்கு ஜீவனை அளிப்பதால் ஆயுர்வேதம் ரத்தத்தை ஜீவன் என்றும் பிராணன் என்றும் குறிப்பிடுகிறது. உயிர்தரும் வஸ்துவாக இருப்பதால் ரத்தத்தை பரிசுத்தமாக காப்பாற்ற வேண்டியது போல், துளி ரத்தமும் வீணில் விரயமாகாமல் காப்பது அவசியம். பித்தத்தின் கொதிப்பினால் பெருங்குடலில் ஏற்படும் புண்ணிலிருந்து ரத்தம், மலம் கழிந்தபின் வெளியாகிறது. அதனால் புளிப்பு, காரம், உப்புச் சுவையுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நலம். சாதா உப்புக்குப் பதிலாக இந்துப்பு சிறிய அளவில் உணவில் சேர்க்கலாம். துவர்ப்பு, கசப்பு, இனிப்புச் சுவை நல்லது. இனிப்பு மாதுளம் பழ ரசம் எந்த நிலையிலும் மிக நல்லது. புளிக்காத சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்டைப் பழங்கள் சாப்பிடலாம். அதிகம் புளிக்காத மோர் உணவில் சேர்ப்பது நலம். நல்ல பசியுள்ளவராக இருந்தால் நெல்பொரி மாவு, தினைப்பொரி மாவுக் கஞ்சி சாப்பிடவும். கருப்பு எள்ளு வாணலியில் வறுத்துத் தூள் செய்து 4 கிராம் வெண்ணையுடன் குழைத்து காலை, இரவு, உணவிற்கு அரை மணி நேரம் முன்பு நக்கிச் சாப்பிடவும். மோருடன் கலந்து அன்னத்தை உண்ணும் போது புளியாக்கீரை, கருவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தொட்டுக் கொள்ளவும்.மாசிக்காய், இலவம்பிசின், பூங்காவிக் கல், கொம்பரக்கு, படிக்காரம், பூங்காவிக் கல்லைக் கொஞ்சம் நெய்தடவி வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். படிகாரத்தை அப்படியே சுத்தமான இரும்புக் கரண்டியில் உருக்கிப் பொரித்து சூர்ணம் செய்து கொள்ளவும். மற்ற மூன்று சரக்குகளை அப்படியே தனியாக நன்கு சூர்ணம் செய்து சம எடையாகச் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். 5 அரிசி எடை முதல் 25 அரிசி எடை வரையில் வயதுக்கேற்றபடி தேனில் குழைத்து ஒரு நாளில் 3,4 தடவை சாப்பிடவும். வாய்ப்புண் வயிற்றுப் புண், மலத்துவாரப்புண் எல்லாவற்றையும் ஆற்றும். ரத்தப்போக்கை உடனே நிறுத்தும். இந்தச் சூர்ணத்தை ரத்தக் கசிவை நிறுத்த மேலுக்கும் உபயோகிக்கலாம்.குடஜத்வகாதி லேஹ்யம் ஒரு ஸ்பூன் காலை, மாலை வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடவும்.

by Swathi   on 10 Dec 2012  13 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
இனிமையான வாழ்க்கைக்கு சித்தர்கள் தரும் நெறிகள் - முனைவர் திரு. அழகர் இராமனுஜம - 2/3 இனிமையான வாழ்க்கைக்கு சித்தர்கள் தரும் நெறிகள் - முனைவர் திரு. அழகர் இராமனுஜம - 2/3
37 How To Cure White Hair Yt 1 Healer Baskar Peace O Master 37 How To Cure White Hair Yt 1 Healer Baskar Peace O Master
கருத்துகள்
27-May-2019 15:12:41 உஷா said : Report Abuse
இ ஹவ் சீன பிளட் இந்த மீ ஸ்டூல்ஸ். பிளட் ட்ராப்ஸ் ஆர் கமிங் while going போர் 2 பாத்ரூம். ப்ளீஸ் கிவ் மீ சோமே ரெமிடிஸ். தேங்க்ஸ் usha
 
16-Jul-2018 10:38:03 Viji said : Report Abuse
என் மகள் வர்சா. 8 மாதக் குழந்தை . மலம் கழிக்கும் போது blood வருகிறது. Pls tell the reason. She is normally outing stool. But why?
 
30-Jan-2018 07:44:19 முத்இ said : Report Abuse
மலம் கழிக்கும் போது ரத்தம் வருகிறது. காரணம் மற்றும் தீர்வு சொல்லுங்கள். இது தீர்க்க கூடிய பிரச்சினையா அல்லது மருத்துவ உதவி தேடலும்?
 
19-Jan-2018 04:59:45 R.manikandan said : Report Abuse
http://www.valaitamil.com/blood-in-stools-was-coming-to-stop-ayurvedic-medicine_7209.html
 
09-Nov-2017 07:55:53 bala said : Report Abuse
எனக்கு வயது 29 மலம் போகும்போது மிகவும் ரத்தம் வருவதுடன் வலிக்கும் வீக்கம் அதிக இருக்கு கஷ்டமா இருக்கு வீடு வைத்தியம் சொல்லுங்க
 
11-Oct-2017 15:30:55 Sathish said : Report Abuse
Malam kazhikum pothu ratham varukirathu enavaga irukum....
 
24-Aug-2017 10:23:03 ஜீவா மஹாலிங்கம் said : Report Abuse
இரும்பினால் வாயில் ரத்தம் வருகிறது ஏன் ? தீர்வு சொல்லவும்
 
05-Apr-2017 05:45:46 selvi said : Report Abuse
மலம் கழிக்கும் போது ரத்தம் வருகிறது வலி எரிச்சல் உள்ளது .வீட்டு வைத்தியம் சொல்லவும் .
 
16-Jan-2017 19:33:58 kumari said : Report Abuse
பாத்ரூம்போகும்போது மலத்துடன் ரத்தமும் வருகிறது. வீட்டு வைத்தியம் சொல்லவும்.
 
28-Mar-2016 12:40:15 பிரபாகரன் said : Report Abuse
மிக்க நன்றி
 
17-Feb-2016 03:51:46  said : Report Abuse
asfdgsh
 
15-Sep-2015 03:36:18 anitha said : Report Abuse
iam 3 month pregnant, motion daily pohala, ponalum tight a kastama iruku, sila neram blood varuthu, enaku theervu sollunga pls
 
16-Jul-2015 06:11:56 NANTHINI said : Report Abuse
எனக்கு 22 வயது ஆகிறது .மலம் கழிக்கும் போது லேசாக ரத்தக்கசிவு எப்போதாவது ஏற்படுகிறது.அது மூலமா?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.