LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

காஞ்சியில் போதி தர்மருக்கு நினைவிடம் !!

சுமார் 1500 வருடங்களுக்கும் முன்பு, சீன தற்காப்புக் கலையை உருவாக்கியவரும், மிகப் பெரிய மருத்துவ நிபுணருமாக விளங்கிய போதி தர்மருக்கு, அவர் பிறந்ததாக கருதப்படும் காஞ்சிபுரத்தில் நினைவிடம் அமைக்க சீன, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சில அமைப்புகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.  

 

இந்த போதி தர்மர் நினைவிடம் சென்னையை சேர்ந்த பண்டைய கல்வி ஆய்வு நிறுவனத்தின் மூலம் கட்டப்படுகிறது. இது தொடர்பாக பேசுவதற்காக, சீனா மற்றும் ஜப்பானை சேர்ந்த சில அமைப்புகள், சில தினங்களுக்கு முன்பு பண்டைய கல்வி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான ஜான் சாமுவேலுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்கு பிறகு, சாமுவேல் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

 

விரைவில் காஞ்சிபுரத்தில் போதிதர்மர் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவிடம் சீனா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் நிதியுதவி மூலம் கட்டப்படுகிறது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த நினைவிடத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்தால் உலகத்தரம் வாய்ந்த புத்த மத தத்துவ மையமாக இது உருவெடுக்கும். 

 

இந்த நினைவிடத்தில் சீனாவின் சோங்ஷான் மலையில் 9 வருடங்கள் தியானம் செய்த போதி தர்மருக்கு அந்த மலையிலிருந்து செதுக்கப்பட்ட அவரது திருவுருவ சிலையை நிறுவப்போவதாக சீனக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நினைவிடத்தில் ஜப்பானில் வடிவமைக்கப்பட்ட நினைவு தூண் ஒன்று நிறுவப்பட உள்ளது. 

 

இந்த மையத்தில் சீன தற்காப்புக் கலை, குங் பூ மற்றும் தியான வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Bodhidharman to get memorial in Kanchipuram

More than 1,500 years after he left home, Bodhidharman, the great master of Zen Buddhism, is set to get a memorial in the city of birth, Kancheepuram. 

by Swathi   on 28 Dec 2013  0 Comments
Tags: போதிதர்மர்   போதிதர்மர் கோவில் காஞ்சிபுரம்   போதிதர்மர் நினைவிடம்   போதிதர்மர் தமிழர்   Bodhidharman Memorial   Bodhidharman Temple   Bodhidharman Memorial Kanchipuram  
 தொடர்புடையவை-Related Articles
காஞ்சியில் போதி தர்மருக்கு நினைவிடம் !! காஞ்சியில் போதி தர்மருக்கு நினைவிடம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.