LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி !! 12 பேர் படுகாயம் !!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9 வது பிளாட்பாரத்தில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


சென்னை சென்ட்ரலில் உள்ள ஒன்பதாவது பிளாட்பாரத்தில் இன்று காலை 7.10 மணி அளவில் பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. 


கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி கொண்டிருந்த போது, அந்த ரயிலின்  எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.


இந்த குண்டு வெடிப்பில், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஸ்வாதி என்ற 22 வயது இளம்பெண் பலியாகியுள்ளார். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இந்த குண்டு வெடிப்பில் படுகாயம் படுகாயமடைந்தவர்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேரின் நிலைமை மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  


குறைந்த சக்தி குண்டு


வெடித்த குண்டுகள் இரண்டும் குறைந்த சக்தி கொண்டதாக இருந்ததால், பாதிப்பு அதிக அளவில் ஏற்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


ரயில் சேவை நிறுத்தம்


இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. புறநகர் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எழும்பூர் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


உதவி எண் அறிவிப்பு

 

சென்னை சென்ட்ரல் நிலைய குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிய தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-25357398 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிந்து கொள்ளலாம்.


நிவாரண தொகை அறிவிப்பு 


குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்ததோருக்கு ரூ.25,000, லேசான காயமடைந்தோருக்கு ரூ.5,000 இழப்பீடுவழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

by Swathi   on 30 Apr 2014  0 Comments
Tags: Chennai Bomb Blast   Chennai Kundu Vedippu   Chennai Central Bomb Blast   சென்னை குண்டு வெடிப்பு   சென்னை ரயில் நிலைய குண்டு வெடிப்பு   சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு     
 தொடர்புடையவை-Related Articles
சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள் சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள்
சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள் சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி !! 12 பேர் படுகாயம் !! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி !! 12 பேர் படுகாயம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.