LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழக அரசின் பொது துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு !!

தமிழக அரசின் கீழ் பணிபுரியும், பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி, 20 சதவீகித போனஸ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 10 சதவிகித போனசும், லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களின் தொழிலாளர்களுக்கு 20 சதவிகித போனசும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றின் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவிகிதமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவிகித போனசும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

 

தமிழ்நாடு மின்சார வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றில் பணியுரியும் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் தொழிலாளர்கள் ஆகியோருக்கு 1500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 1200 ரூபாயும் தீபாவளி போனசாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 21 Oct 2013  0 Comments
Tags: தீபாவளி போனஸ்   தமிழக அரசு   போனஸ்   ஜெயலலிதா   20 சதவீத போனஸ்   Tamilnadu CM   Diwali Bonus  
 தொடர்புடையவை-Related Articles
அரசின் வேண்டுகோளை யூனிக்கோடு ஏற்றது. அரசின் வேண்டுகோளை யூனிக்கோடு ஏற்றது.
பட்டதாரி இளைஞர்களுக்கான தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி !! விண்ணப்பிக்க செப். 30 கடைசி நாள் !! பட்டதாரி இளைஞர்களுக்கான தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி !! விண்ணப்பிக்க செப். 30 கடைசி நாள் !!
ஜெயலலிதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்திப்பு !! ஜெயலலிதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்திப்பு !!
தமிழகம் முழுவதும் மலிவு விலை காய்கறி கடை !! தமிழக முதல்வர் உத்தரவு !! தமிழகம் முழுவதும் மலிவு விலை காய்கறி கடை !! தமிழக முதல்வர் உத்தரவு !!
இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது : தமிழக சட்டசபையில் தீர்மானம் !! இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது : தமிழக சட்டசபையில் தீர்மானம் !!
தமிழக அரசின் பொது துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு !! தமிழக அரசின் பொது துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு !!
கலைமாமணி விருதுகள் 1991-2010 கலைமாமணி விருதுகள் 1991-2010
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.