LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

தலைநகர் டெல்லி பூங்காவில் புலிக்கூண்டில் தவறிவிழுந்த மெக்சூத் சொல்லிச் சென்ற பாடம்

தலைநகர் டெல்லி பூங்காவில் புலிக்கூண்டில் தவறிவிழுந்த மெக்சூத் என்ற அந்த வாலிபர் விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும். இவரது மொழி புரியாத அந்த புலி வாலிபரின் கழுத்தை பிடித்து இழுத்துச் சென்று கொன்றுவிட்டது . கொல்லப்பட்ட மெக்சூத் 22 வயது வாலிபர் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவரது கர்ப்பிணி மனைவி கொல்கத்தாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை நேரில் பார்த்து சத்தம்போட்டுக்கொண்டிருந்தவர்கள்  கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் ஒரு உயிர் பழியை தடுத்திருக்க முடியும். பதட்டத்தில் இருந்த அந்த வாலிபருக்கு 18 அடி அருகில் இருந்தவர்கள், புகைப்படம், காணொலி என்று எடுத்தவர்கள் சில தகவல்களை சொல்லி அவரை காப்பாற்றக்கூடிய சாத்தியம் இருந்திருக்கும். இந்த மனதை உலுக்கும் சம்பவம் மக்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். நம் வீட்டில், பள்ளிகளில் இதுபோல் ஓரு அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். சரி, இம்மாதிரி மிருகங்களிடம் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது? ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் என்ன பயன்?

 

  • அந்த வாலிபன் அமைதியாய் எழுந்து நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே என்று திரும்பிப் போயிருக்கும்.
  • உட்கார்ந்து கையை காலை ஆட்டாமல் அமைதியாக பேச்சு மூச்சு இல்லாமல் நின்றிருந்தால் ஒருவேளை தன்னை தொந்தரவு செய்யவில்லை என்று சென்றிருக்கும்.
  • மேலே நின்றவர்கள் கூச்சல் போட்டு, கண்டதை வீசி புலியை கோபமூட்டாமல் தன்னிடம் இருந்த சட்டையை கழற்றி அல்லது துணியை கொளுத்தி தொடந்து அவரிடம் வீசியிருந்தால் தீயின் அனலைப் பார்த்து புலி ஒதுங்கியிருக்கும். அல்லது தீயைப் படித்து கையில் காண்பித்து அந்த வாலிபர் கொஞ்சம் நேரம் அவரை நெருங்காமல் பார்த்திருக்கலாம். மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
  • சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் ஒருவேளை புலி அந்த இடத்திலிருந்து தப்பித்துச் ஓடியிருக்கும்.

 

 

இந்தியக் கல்வித் தந்தைகளே! எங்களுக்கு அமெரிக்காவிலும் , ஆஸ்திரேலியாவிலும் என்ன நடக்கிறது என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.

 

மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது? விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை? மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி? குழந்தைகளை வளர்ப்பது எப்படி? இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்வது எப்படி? போன்று கற்றுக்கொள்ள எவ்வளவோ பாடங்கள் இருக்கிறது..


இதுபோன்ற வாழ்வியல் அறிவை எல்லாம் கதைகளாக, ஒரு காட்டில் ஒரு பையன் புலியிடம் மாட்டிக்கொண்டானாம், அவன் இறந்ததுபோல் அசைவில்லாமல் படுத்திருந்தானாம். இவனால் நமக்கு பாதிப்பில்லை அல்லது உயிரில்லை என்று பார்த்துவிட்டு புலி சென்றுவிட்டதாம். அந்தப் பையன் உயர் தப்பினானாம் என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.

by Swathi   on 26 Sep 2014  4 Comments
Tags: Tiger Attack   Delhi Tiger Attack   White Tiger   Delhi Zoo Incident   Maqsood Death   Delhi Zoo Maqsood Death   வன உயிரியல் பூங்கா  
 தொடர்புடையவை-Related Articles
தலைநகர் டெல்லி பூங்காவில் புலிக்கூண்டில் தவறிவிழுந்த மெக்சூத் சொல்லிச் சென்ற பாடம் தலைநகர் டெல்லி பூங்காவில் புலிக்கூண்டில் தவறிவிழுந்த மெக்சூத் சொல்லிச் சென்ற பாடம்
கருத்துகள்
02-Jan-2018 11:16:11 கி.முனுசாமி said : Report Abuse
ஹாய், ஆசிரியருக்கு நன்றி, விலங்குகளிடம் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது, காமுகர்களிடம் பெண்கள் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது, திருடர்களிடமும், கொலைகார்களிடம் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது என்படத்தை கல்வி கூடங்கள் படம் நடத்த வேண்டும். மக்களை காப்பற்றதா கல்வி பயனில்லை.உயிரை காப்பற்றதா கல்வி பயனற்றது.மக்களுக்கு ஆபத்தில் சிக்கினால் எப்படி மீண்டுவருவது எப்படி என்பதை கற்பிக்கவேண்டும். பாதுகாப்பு கல்வி அவசியம்.
 
02-Jan-2018 11:15:03 கி.முனுசாமி said : Report Abuse
ஹாய், ஆசிரியருக்கு நன்றி, விலங்குகளிடம் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது, காமுகர்களிடம் பெண்கள் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது, திருடர்களிடமும், கொலைகார்களிடம் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது என்படத்தை கல்வி கூடங்கள் படம் நடத்த வேண்டும். மக்களை காப்பற்றதா கல்வி பயனில்லை.உயிரை காப்பற்றதா கல்வி பயனற்றது.மக்களுக்கு ஆபத்தில் சிக்கினால் எப்படி மீண்டுவருவது எப்படி என்பதை கற்பிக்கவேண்டும். பாதுகாப்பு கல்வி அவசியம்.
 
02-Jan-2018 11:08:28 கி.MUNUSAMY said : Report Abuse
ஹாய், உண்மையே! ஆசிரியருக்கு மிக்க நன்றி. மனிதநேயம் இல்லை. நேற்று அந்த மானிடருக்கு நடந்தது போல் அவரவர் குடும்பத்தில் ஏற்பட்டால் தான். நன்கு உணர்வர் நண்பரே, இன்றய கல்வி முறை இம்மாதிரி சம்பவங்களில் இருந்து தப்பிக்க சொல்லித்தருவதில்லை. உதவி செய்தலும் யாரும் முன்வர மாட்டார்கள். செல்போன் படம் பிடிப்பார்கள் ஈவு இரக்கமில்லாதவர்கள். மிகவும் வருத்தப்படுகிறேன், விலங்குகளில் ஒற்றுமையாக இருக்கின்றன. அதை பார்த்தாவது மனிதர்கள் மாறனும்.
 
04-Sep-2015 03:15:05 பாலா said : Report Abuse
அருமையான தகவல். மனிதனுக்கு பதிலாக அங்கு ஒரு மிருகம் இவ்வாறு ஆபத்தில் சிக்கி இருந்தால் கண்டிப்பாக மற்ற மிருகங்கள் அதனை காப்பாற்றி இருக்கும். ஆனால் வெட்கக்கேடு ஆறறிவுள்ள மனித இனம் மட்டுமே இவ்வாறான இன்னொரு மனிதனின் சாவை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது ... இனிமேலும் இவ்வாறு நடக்காமல் இருக்க இந்த தகவல் துணை புரியலாம் .. இதனை பகிர்ந்ததற்கு நன்றிகள் .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.