LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை லாரன் ஜே இர்வின் !!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் தான் லிங்கா. 


இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடிக்கின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு ஜோடியாக பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடிக்கிறார். அவர் ரஜினியுடன் நடிக்கும் காட்சி, புகைப்படங்களாக தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் வெளிநாட்டில் படித்த எஞ்ஜினியராக ஒரு பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்தியா விடுதலையடைவதற்கு முந்தைய காலத்தில் நடக்கும் கதையில் ரஜினி, லாரன் இர்வின், சோனாக்ஷி நடிக்கிறார்கள். 


கடந்த வாரம் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்க லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மைசூர் வந்தார் லாரன். அவர் பங்கேற்கும் காட்சிகள் முடிந்ததும், "சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவம். ரவிக்குமார் மாதிரி இயக்குநர் ஒரு ஆச்சர்யம்," எனப் புகழ்ந்தார்.


அத்துடன் கடந்த வாரம் வெளியான ரஜினியின் கோச்சடையான் படத்தையும் பார்த்துப் பாராட்டியுள்ளாராம். 


லாரன் இர்வின், பிரிட்டிஷ் படம் ஹார்ட், ஹாலிவுட் படம் வகரி, லண்டனின் புகழ்பெற்ற நாடகங்கள் வெஸ்ட் எண்ட், ஆன்னி, ஆலிவர் போன்றவற்றில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 28 May 2014  0 Comments
Tags: Linga Rajini   Rajini\'s Linga   Lauren J Irwin   Lauren J Irwin Rajinikanth Movie   British Actress Lauren J Irwin   Lauren J Irwin Linga   லிங்கா  
 தொடர்புடையவை-Related Articles
விநாயகர் சதுர்த்தி அன்று லிங்கா போஸ்டர் ரிலீஸ் !! விநாயகர் சதுர்த்தி அன்று லிங்கா போஸ்டர் ரிலீஸ் !!
சூப்பர் ஸ்டாரின்  'லிங்கா' தீபாவளிக்கு வெளியாகிறதா ? சூப்பர் ஸ்டாரின் 'லிங்கா' தீபாவளிக்கு வெளியாகிறதா ?
லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை லாரன் ஜே இர்வின் !! லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை லாரன் ஜே இர்வின் !!
மீண்டும் ரஜினிகாந்துடன் இணைகிறார் நயன்தாரா !! மீண்டும் ரஜினிகாந்துடன் இணைகிறார் நயன்தாரா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.