LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

தமிழகத்தில் தவிர்க்கப்படவேண்டிய Bro, Ji கலாச்சாரம்

தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் Bro, Ji என்று அழைப்பது பரவி வருகிறது.. தன்னை விட வயது முதிர்ந்தவர்களை, பெரிய பொறுப்பில் உள்ளவர்களை, மரியாதைக்குரியவர்களை, தனக்கு இணையான வயது-பொறுப்பில் உள்ளவர்களை உதவிக்கோ அல்லது வேறு காரணங்களுக்கோ அணுகும்போது டாக்டர், ஐயா, சார் , அண்ணன், வணக்கம் , ங்க, பெயர் சொல்லி அழைத்தல் என்று ஏதாவது ஒன்று சொல்வதுதானே நம் பழக்கம்..

அது என்ன ப்ரோ, ஜி ? இது என்ன ஸ்டைலா ?

பலர் என்னிடம் இப்படி கூப்பிடும்போது அவர்களுக்கு ஏதும் என்னால் செய்யமுடிந்த உதவியைக் கூட செய்ய மனம் வருவதில்லை. உரையாடலை தொடர்வதில் விருப்பமிருப்பதில்லை. ஒரு மனிதரை அழைக்கும்போது அவர்களுக்கு புரிந்த, பிடித்தபடி அழைப்பதுதான் நாகரீகம், அது உரையாடலில் மிக முக்கியமான ஒன்று. ஒருவருடன் தொடங்கும்போதே அவர்களுக்கு பிடிக்காத வகையில் உரையாடலை தொடர்வது அந்த தொடர்பை, செலவழிக்கும் நேரத்தை விரயமாக்கும்.

Bro, Ji கலாச்சாரம் தமிழகத்தில் உறவை வளர்க்காது என்பதை உணர்வோம்.. நம்மை அப்படி அழைப்பவரை அது என்ன ஜி, ப்ரோ என்று உடனுக்குடன் கேட்டு அங்கேயே சுட்டிக்காட்டுவதால் இதை ஒழிக்கமுடியும். அதை ஒரு அநாகரிக வார்த்தையாக மாற்றவேண்டியுள்ளது.

தமிழ்ச்சங்கத் தலைவர்களாக பொறுப்பேற்பவர்கள் அதற்கு முன் அந்த பழக்கம் இருந்தாலும் இதுபோன்றவைகளை தவிர்ப்பதும், தமிழைத் தமிழாக பேசுவதும், உங்கள் மாகாணத்தின் ஒரு மதிப்புமிக்க தலைவராக, முன்மாதிரியாக இருக்கவேண்டியது அவசியம் என்பதை உணர்வார்களா? இதை எழுதிய அடுத்த வாரத்தில் ஒரு நண்பர் என்னிடம் சொல்லுங்கஜி என்றார், நேரடியாக சொல்வதற்கு பதில் , பார்ப்பதை, கேட்பதை, மாற்றப்படவேண்டியத்தை எழுதினால் கவனிக்கவேண்டியவர்கள் கவனிப்பார்கள் என்றே எழுதுகிறேன்..

-முகநூலில் ச.பார்த்தசாரதி 

 

பின்னூட்டங்கள்: 

Sumi Raj Highlighted with great concern, awareness is the key and I sincerely accept the truth & welcome the application of addressing.

 

Kamalraj Pakkirisamy சமீபகாலமாக இந்த பிரச்சினையை நானும் சந்திக்கிறேன். முக்கியமாக நன்பர்கள் மத்தியில் இது வட்டார வழக்காக மாறிவருவது வருந்தத்தக்கது. நாம் முடிந்த வரை இதை எடுத்துச்சொல்லி புரியவைப்போம்.

 

Kalyan Muthusamy இதைக்கேட்டாலெ முதுகில் கம்பளிப்பூச்சி ஊர்வதுபோல இருக்கிறது. முன்னால் தல என்ற விளிப்பும் அசூயை தருவதாக இருந்தது. ஆனால் என் கவனிப்பு: Bro என்பது சமவயதுக்காரர்களிடமும், ஜி என்பதை மரியாதை(!) கொடுப்பதாக உபயோகிக்கிறார்கள். என் கல்லூரிக்காலங்களில் மச்சி, மச்சான், மாப்ள வழக்கில் இருந்த சொற்கள் போல இதுவும் கடந்து போய்விடும். நல்லவேளை என்னிடம் நேரடியாக யாரும் இதை உபயோகிப்பதில்லை. ஒருவேளை அந்த வயதுக்காரர்கள் என் வட்டத்திலேயே இல்லையோ என்னவோ...

 

Jeba Jerin பூனைக்கு மணி கட்டியதற்கு மிக்க நன்றி பார்த்தா!

 

 

 

by Swathi   on 03 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.