LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது -- இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், செயற்கைக்கோள்களையும், அதனை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. 

இஸ்ரோ நிறுவனமும், அதன் வணிகக் கிளையான ‘ஆண்டிரிக்ஸ்’ நிறுவனமும் இணைந்து இங்கிலாந்துக்கு சொந்தமான செயற்கைகோள்களை வணிக ரீதியில் விண்ணில் செலுத்துவதற்காக  ஒப்பந்தம் செய்துள்ளது.

வெள்ளக் கண்காணிப்பு, விவசாய பயிர் மதிப்பீடு, காடுகள் கண்காணிப்பு,  பேரிடர் மேலாண்மை, கடல் பயன்பாடுகளான கப்பல் கண்டறிதல், எண்ணெய்க் கசிவு கண்காணிப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற பூமியின் கண்காணிப்புக்காக 430 கிலோ எடை கொண்ட நேவாசார்-எஸ் செயற்கைகோளுடன், 450 கிலோ எடை கொண்ட எஸ்.எஸ்.டி.எல், எஸ்1-4 போன்ற  செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் 16-ந் தேதி இரவு 10.07 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும். இதற்கான ‘கவுண்ட்டவுன்’ 15-ந் தேதி பகல் 1.30 மணிக்கு தொடங்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

by Swathi   on 11 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவில் எஞ்சின் இல்லாத ரயிலின் முதல் வெள்ளோட்டம்! இந்தியாவில் எஞ்சின் இல்லாத ரயிலின் முதல் வெள்ளோட்டம்!
ஜிசாட்- 29 செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து ஜிசாட்- 29 செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
இந்திய குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் பங்கேற்கிறார்! இந்திய குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் பங்கேற்கிறார்!
ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மெகா திட்டம் தயாரிப்பு! ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மெகா திட்டம் தயாரிப்பு!
தொழிற் புரட்சியால் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது: பிரதமர் நரேந்திரமோடி பேச்சு! தொழிற் புரட்சியால் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது: பிரதமர் நரேந்திரமோடி பேச்சு!
மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல் நல குறைவால்  காலமானார்! மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல் நல குறைவால் காலமானார்!
பாலக்காடு- பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதையில் 100 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம்! பாலக்காடு- பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதையில் 100 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம்!
தத்து என்று கூறி குழந்தைகள் கடத்தலைத் தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: அதிகாரி தகவல்! தத்து என்று கூறி குழந்தைகள் கடத்தலைத் தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: அதிகாரி தகவல்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.