LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- மூலம் (Piles)

மூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து!

 

மூல நோயால் அவதிப்படுபவர் என்ன உணவைச் சாப்பிடலாம் என்பது குறித்து டாக்டர் பி.எல்.டி.கிரிஜா விளக்குகிறார். மூல நோய் தீவிரமடைந்தால் மனிதரைக் கடுமையாக வாட்டும் வாய்வின் சீற்றத்தால் மூலம் ஏற்பட்டால் வயிறு உப்புசம், உடல் வலி அல்லது குத்து வலி, இருதயத்தில் படபடப்பு, மலச்சிக்கல், சிறுநீர் தடைபடுதல், வாய்வு சரியாக பிரியாமல் இருப்பது, தொடை, இடுப்பு, முதுகு, வயிறு, விலாப் பக்கங்கள், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் வலி, மூக்கில் சளி, தும்மல், ஏப்பம், தலைவலி, இருமல் வாய்வு மேல் நோக்கி செல்வது, நாக்கில் ருசியின்மை போன்ற தொல்லைகளும் சேர்ந்து காணப்படும்.
மூல நோயில் பித்தம் தீவிரமாக இருந்தால் இரத்தக் கசிவு, எரிச்சல், வீக்கம், வலி, காய்ச்சல், மயக்கம், பசியின்மை, மஞ்சள், பச்சை நிறத்தில் மலம் துர்நாற்றத்துடன் வெளியேறுவது போன்றவை ஏற்படும். கப தோஷத்தால் உருவாகும் மூல நோயில் முளைகள் வழவழப்பாக எண்ணெய்ப் பசையுடன் ஈரக்கசிவுடன் தோன்றும். இதில் வீக்கமும் நமைச்சலும் அதிகமாக ஏற்படும். கால் இடுக்குப் பகுதிகளில் வீக்கம், அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது காய்ச்சல் வாந்தி, வலி இவை நீண்ட நாட்கள் தொடர்ந்து துன்புறுத்தும்.
மூல நோயால் அவதிப்படும் நோயாளிகள் எளிதில் ஜீரணமாகும் வாய்வை சரியாக இயங்க வைக்கும் உணவு, பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். இதற்கு எதிர்மாறான எல்லா உணவுகளையும் பழக்க வழக்கங்களையும் தவிர்க்க வேண்டும். இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. மூல நோயின் வகைகளைப் பொறுத்து அவை மாறுபடும். “தக்ரப்ரயோகம்‘ எனப்படும் மோரைப் பயன்படுத்துவது சிறந்த சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறைப்படி நோயாளியின் உடல் நிலை நோயின் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு வாரத்திலிருந்து நோயை குணப்படுத்த மோரை விட சிறந்த உணவோ, மருந்தோ கிடையாது. ஜீரண சக்தி மிகவும் குன்றியிருக்கும் நிலையில் மோரை அருந்துவதால் ஜீரண சக்தி மேம்பட்டு நோயும் குணமாகும். ஜீரணக் கோளாறுகளுக்கு மோர் ஒரு அபூர்வ மருந்து. வயிற்வில் வாய்வு, கபம் இரண்டையும் போக்குகிறது.
இப்போதெல்லாம் தயிரைச் சிறிது குழப்பி விட்டு அது தான் மோர் என்று பலர் அருந்துகின்றனர். தயிரின் குணங்கள் மோரின் குணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
சிலர் தயிர் சரியாகத் தோய்வதற்கு முன்பே அதை உட்கொள்கின்றனர். இப்படி அரைகுறையாகத் தோய்ந்த தயிரை சாப்பிட்டால் பல நோய்கள் தோன்றும். சரியான மோரை அருந்த வேண்டும் என்றால் இரவில் பாலைத் தோய்த்து அதைக் காலையில் நன்றாகக் கடைந்து வெண்ணெய் பிரிந்து வந்த பிறகே மோரைப் பருக வேண்டும்.

மூல நோயால் அவதிப்படுபவர் என்ன உணவைச் சாப்பிடலாம் என்பது குறித்து டாக்டர் பி.எல்.டி.கிரிஜா விளக்குகிறார். மூல நோய் தீவிரமடைந்தால் மனிதரைக் கடுமையாக வாட்டும் வாய்வின் சீற்றத்தால் மூலம் ஏற்பட்டால் வயிறு உப்புசம், உடல் வலி அல்லது குத்து வலி, இருதயத்தில் படபடப்பு, மலச்சிக்கல், சிறுநீர் தடைபடுதல், வாய்வு சரியாக பிரியாமல் இருப்பது, தொடை, இடுப்பு, முதுகு, வயிறு, விலாப் பக்கங்கள், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் வலி, மூக்கில் சளி, தும்மல், ஏப்பம், தலைவலி, இருமல் வாய்வு மேல் நோக்கி செல்வது, நாக்கில் ருசியின்மை போன்ற தொல்லைகளும் சேர்ந்து காணப்படும்.மூல நோயில் பித்தம் தீவிரமாக இருந்தால் இரத்தக் கசிவு, எரிச்சல், வீக்கம், வலி, காய்ச்சல், மயக்கம், பசியின்மை, மஞ்சள், பச்சை நிறத்தில் மலம் துர்நாற்றத்துடன் வெளியேறுவது போன்றவை ஏற்படும். கப தோஷத்தால் உருவாகும் மூல நோயில் முளைகள் வழவழப்பாக எண்ணெய்ப் பசையுடன் ஈரக்கசிவுடன் தோன்றும். இதில் வீக்கமும் நமைச்சலும் அதிகமாக ஏற்படும். கால் இடுக்குப் பகுதிகளில் வீக்கம், அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது காய்ச்சல் வாந்தி, வலி இவை நீண்ட நாட்கள் தொடர்ந்து துன்புறுத்தும்.மூல நோயால் அவதிப்படும் நோயாளிகள் எளிதில் ஜீரணமாகும் வாய்வை சரியாக இயங்க வைக்கும் உணவு, பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். இதற்கு எதிர்மாறான எல்லா உணவுகளையும் பழக்க வழக்கங்களையும் தவிர்க்க வேண்டும். இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. மூல நோயின் வகைகளைப் பொறுத்து அவை மாறுபடும். “தக்ரப்ரயோகம்‘ எனப்படும் மோரைப் பயன்படுத்துவது சிறந்த சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறைப்படி நோயாளியின் உடல் நிலை நோயின் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு வாரத்திலிருந்து நோயை குணப்படுத்த மோரை விட சிறந்த உணவோ, மருந்தோ கிடையாது. ஜீரண சக்தி மிகவும் குன்றியிருக்கும் நிலையில் மோரை அருந்துவதால் ஜீரண சக்தி மேம்பட்டு நோயும் குணமாகும். ஜீரணக் கோளாறுகளுக்கு மோர் ஒரு அபூர்வ மருந்து. வயிற்வில் வாய்வு, கபம் இரண்டையும் போக்குகிறது.இப்போதெல்லாம் தயிரைச் சிறிது குழப்பி விட்டு அது தான் மோர் என்று பலர் அருந்துகின்றனர். தயிரின் குணங்கள் மோரின் குணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.சிலர் தயிர் சரியாகத் தோய்வதற்கு முன்பே அதை உட்கொள்கின்றனர். இப்படி அரைகுறையாகத் தோய்ந்த தயிரை சாப்பிட்டால் பல நோய்கள் தோன்றும். சரியான மோரை அருந்த வேண்டும் என்றால் இரவில் பாலைத் தோய்த்து அதைக் காலையில் நன்றாகக் கடைந்து வெண்ணெய் பிரிந்து வந்த பிறகே மோரைப் பருக வேண்டும்.

 

by Swathi   on 05 Apr 2015  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
இனிமையான வாழ்க்கைக்கு சித்தர்கள் தரும் நெறிகள் - முனைவர் திரு. அழகர் இராமனுஜம - 2/3 இனிமையான வாழ்க்கைக்கு சித்தர்கள் தரும் நெறிகள் - முனைவர் திரு. அழகர் இராமனுஜம - 2/3
37 How To Cure White Hair Yt 1 Healer Baskar Peace O Master 37 How To Cure White Hair Yt 1 Healer Baskar Peace O Master
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.