LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

முட்டைக்கோஸ் தூள் பக்கோடா

தேவையானவை :


முட்டைக்கோஸ் - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 2

பச்சைக்கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு

பூண்டு - இரண்டு பல்

கடலை மாவு - ஒரு கப்

பச்சைமிளகாய் - 2

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

அரிசி மாவு - ஒரு கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

சமையல் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


செய்முறை :


1. முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். பூண்டையும் தட்டி வைத்துக் கொள்ளவும்.


2. கடலை மாவு, அரிசி மாவுடன், நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும். இந்தக்கலவையில் சோடா உப்பை விட்டு கிளறிக் கொள்ளவும்.


3. சமையல் எண்ணெய் இரண்டு டீஸ்பூன் எடுத்து காய வைத்து சூடான எண்ணையை பக்கோடா மாவில் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.


4. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பக்கோடா மாவை உதிர்த்து விட்டு மொறுமொறுவென பொன்னிறமாக எடுக்கவும். முட்டைக்கோஸ் பக்கோடா ரெடி.

Cabbage Pakkoda

Ingredients for Cabbage Pakkoda:


Cabbage-200g

Big Onion-2

Green Coriander Leaves-Hand Catch

Garlic-2 Flakes

Bengal Gram Flour-1cup

Green Chilly-2

Soda Salt-1pinch

Chilly Powder-1/2 tbsp

Rice Flour-1tbsp

Salt-Enough Need

Oil-for Seasoning


Method to make Cabbage Pakkoda:


1. Chop cabbage, onion, green chilly and coriander leaves very finely. Beat the garlic and keep aside.

2. Mix Bengal gram flour, rice flour along with chopped cabbage, onion, green chilly, coriander leaves and garlic. Add salt along with this flour and mix well.

3. Take 2tea spoon of oil and allow to heat. Now mix the oil with pakkoda flour like a thick batter.

4. Heat oil in a pan and loosely drop them in oil like small pieces of pakkoda. Once they turn golden brown, remove from stove. Now cabbage pakkoda is ready to serve.

 

by   on 23 Aug 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
26-May-2015 22:05:11 karthik said : Report Abuse
சூப்பர் இருக்கு இந்த இணைய தளம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.