LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

கால்சியம் சத்து அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்...

ஆரோக்கியமான எலும்புகளைப் பெற கால்சியம் சத்து இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக கால்சியம் குறைபாடானது, ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். மாதவிடாய் காரணமாக, பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். பிரசவத்தின்
போதும் நிறைய கால்சியம் போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள், கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களைப் பற்றி இப்போது பார்ப்போமா...

பால்

பாலில் கால்சியம் அதிகம் நிறைந்தது. அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.

தயிர்

பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும், பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.

இறால்

இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும். பற்கள் பிரச்சனை இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் பற்கள் வலிமையாகும்.

மத்தி மீன்

மீன்களில் மத்தி மீன் மிகவும் சத்தானது. அத்தகைய மீன், 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.

சீஸ் மற்றும் அத்திப்பழம்

பால் பொருட்களில் ஒன்றான சீஸ், பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. அத்திப்பத்தில் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள்
நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும், மூன்று துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது.

பச்சை இலைக்காய்கறிகள்

பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

கடல் சிப்பி

பொதுவாக கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. ஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம்.

பாதாம்

பாதாமில் விட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70- 80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.

by Swathi   on 20 Jan 2016  3 Comments
Tags: கால்சியம்   கால்சியம் அதிகரிக்க   calcium rich foods              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கால்சியம் சத்து அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்... கால்சியம் சத்து அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்...
கருத்துகள்
13-Nov-2017 10:18:13 Kiruthika said : Report Abuse
வெரி nice
 
23-Feb-2016 04:57:00 shobana said : Report Abuse
இட் இச் வெரி உசெபிஉல் போர் ஆல்
 
18-Feb-2016 10:45:43 Dr .prasanth said : Report Abuse
It so good
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.