LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    இயற்கை விவசாயம் Print Friendly and PDF
- மற்றவை-வகைப்படுத்தாதவை

காளிபிளார் இயைக்கை முறையில்

80 நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் சென்று 10 நாள் ஆன காளிபிளார் நாற்று (1000) வாங்கிவந்து நடவுசெய்தேன். காய்கறிகளிலேயே அதிகம் மருந்தடிப்பது காளிபிளார்ருக்குதான், அதுவும் பூவின் மேலே. காளிபிளார்ருக்கு 80 நாட்களில் 5-6 முறையாவது கண்டிப்பாக மருந்துஅடிக்கவேண்டும், இல்லையென்றால் செடியின் இலையை புழு/வண்டு தாக்கும், பூ வரும்போது அதை உண்டுவிடும், அல்லது பூ வந்தவுடன் புழு ஏறிவிடும்.

ஆனால் நான் மருந்து வாடைகூட படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். செடி நட்டு 25ஆவது நாள், வண்டு செடியை தாக்கி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் , 1000 செடியில் சுமார் 500 செடி மட்டுமே பிழைத்தது.

35ஆவது நாள் வண்டின் தாக்கம் அதிகமாக இருந்தது. இனி விட்டால் எல்லா செடியும் படுத்துவிடும் என்றநிலை! 40தாவது நாளில் ஒருசெடிக்கு 3-4 வண்டுகள். 500 செடி 400 ஆக குறைத்தது. ஆனால் நான் மருந்து அடிக்கவில்லை.

யோசித்தேன் வேப்பெண்ணை 200 ml, கல்லுப்பு 2 kg, 3 குடம் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு செடியாக தெளித்தேன். மறுநாளே ஒருவண்டைகூட காணவில்லை. இன்று 80ஆவது நாள், இதுவரை ஒரு வண்டு, புழு கூட இல்லை. இதுவரை உள்ளூரில் 20 பூ கொடுத்திருப்பேன், அனைவரும் சொன்னது " பூவில் ஒரு புழுகூட இல்லை "!

நேற்று பூவை புளியம்பட்டி சந்தையில் விற்றுவிட்டேன் . வியாபாரிகள் சொன்னது பூ மஞ்சளா இருக்கு, வெள்ளைய இருந்ததன் வாங்குவாங்க. நானும் சில காலம்வரை வெள்ளையா இருந்தாதான் நல்லப்பூ என்று நினைத்தேன். வெயில் அதிகமாக இருந்தால் மஞ்சள் அடிக்கும், தண்ணீர் பத்தவில்லையென்றால் pink அடிக்கும்.

நான் முதலில் காளிபிளார் பயிர் செய்ய காரணம், அதிகம் மருந்தடிக்கும் செடியை நம்மால் இயைக்கை முறையில் செய்யமுடியுமா என்றறியதான்.

கண்டிப்பாக முடியும்

 

-நன்றி:சிவராஜ் பழனிசாமி

by Swathi   on 08 Apr 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
"உயிர்ச் சங்கிலியை அறுக்கும் பூச்சிக்கொல்லிகள்"
*இன்று ஒரு பூச்சி* *இன்று ஒரு பூச்சி*
மிளகாய்க் காட்டுக்கு ஆறு முறை களை எடுக்க வேண்டுமா? மிளகாய்க் காட்டுக்கு ஆறு முறை களை எடுக்க வேண்டுமா?
"இட்டேரி உயிர்வேலி"
“இருமடிப் பாத்தி / மேட்டுப்பாத்தி” “இருமடிப் பாத்தி / மேட்டுப்பாத்தி”
பனியில் விளையும் பயிர்கள் பனியில் விளையும் பயிர்கள்
துவரையும் தற்சார்புவாழ்வியலும் துவரையும் தற்சார்புவாழ்வியலும்
பயறுவகை பயிர்களில் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பயறுவகை பயிர்களில் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.