|
||||||||
குடை மிளகாய் - உருளைக்கிழங்கு பொரியல் (capsicum&potato poriyal) |
||||||||
தேவையானவை: உருளைக் கிழங்கு_1 குடைமிளகாய்_1 பூண்டு_2 பற்கள் மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்_சிறிது உப்பு_தேவைக்கு நல்லெண்ணெய்_2 டீஸ்பூன் சீரகம்-சிறிது பெருஞ்சீரகம்-சிறிது உளுந்து-சிறிது பெருங்காயம்-சிறிது கறிவேப்பிலை-சிறிது செய்முறை: 1.ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு குடைமிளகாயைப் போட்டு,சிறிது உப்பு போட்டு வதக்கு. 2.அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கக்கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும். 3.அடுத்து உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வேகவைக்கவும். 4.உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் வதக்கி வைத்துள்ள குடைமிளகாயைச் சேர்த்துக் கிளறவும். 5.உருளைக்கிழங்கும்,குடைமிளகாயும் நன்றாகக் கலந்ததும் இறக்கு. |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|