LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

காவிரி நீர் தமிழகத்தை தாமதமாக வந்தடைந்தது !

உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடகா காவிரியில் திறந்து விட்ட தண்ணீர் நேற்று மேட்டூர் அணையை வந்தடைந்தது.கடந்த 6ம் தேதி இரவு கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. அந்த நீர் மறுநாள் தமிழகத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டதுஆனால் ஆற்றில் பல இடங்கள் வறண்டு கிடந்ததால் ஆங்காங்கே உள்ள பள்ளங்களிலும் தண்ணீர் நிரம்பியது. இதனால், தாமதம் ஏற்பட்டு நேற்று முன்தினம் மாலை பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது. அங்கிருந்து மேட்டூர் அணையை நீர் வந்தடைவதிலும் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக பிலிகுண்டுலுவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேர 10 மணி  நேரமாகும். ஆனால், நேற்று காலை 8 மணி வரை 14 மணி நேரமாகியும் நீர் வந்து சேரவில்லை. அப்போது, அணையின் நீர் மட்டம் 47.85 அடியாக இருந்தது. இந்நிலையில், நேற்று நண்பகல் நேரத்தில் கர்நாடகம் திறந்து விட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அதிகாலை வரை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நண்பகல் நேரத்தில் வினாடிக்கு 11,500 கனஅடியாக அதிகரித்தது.

Cauvery water Reaches Mettur on Sunday

The initial flows of the Cauvery water, released from Krishna Raja Sagar Reservoir in Karnataka on Dec 6 th night, reached the Mettur on Sunday Afternoon.This was in response to the direction of the Supreme Court to Karnataka to release 10,000 cusecs till Monday.The water level at 8 a.m. on Sunday stood at 47.85 feet with inflow of 3,600 cusecs and outflow of 10,000 cusecs.Earlier, the zero point of the river course at Billigundlu on the inter-State border recorded the early flows.which was around 10,000 cusecs at 6 a.m., crossed 11,000 cusecs four and a half hours later. At 1-30 p.m., the inflow was 11,700 cusecs.

by Swathi   on 10 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.