LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- கல்வி

நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ!!

கடந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வின் (நீட் தேர்வு) போது கடைப்பிடிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த ஆண்டு முன்கூட்டியே ஆடை கட்டுப்பாட்டு விதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு,

தேர்வர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும். ஷூ அணியக் கூடாது. பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது.

பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது. குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம்.

தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது. ஜியோமெட்ரி அல்லது பென்சில் டப்பாக்கள், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 19 Apr 2018  0 Comments
Tags: NEET Exam   2018 NEET Exam Rules   NEET Exam Dress Code   நீட் தேர்வு   ஆடை கட்டுப்பாடு   சிபிஎஸ்இ     
 தொடர்புடையவை-Related Articles
நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ!! நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ!!
நீட் தேர்வு எதிர்ப்பு, ஊடகச் சந்திப்பிற்கு உலகத் தமிழ் அமைப்பு அழைப்பு ! நீட் தேர்வு எதிர்ப்பு, ஊடகச் சந்திப்பிற்கு உலகத் தமிழ் அமைப்பு அழைப்பு !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.