LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

கெமிஸ்ட்ரியும் - கணிதமும் - சங்கர் ஜெயகணேஷ்

கெமிஸ்ட்ரியும் - கணிதமும் - சங்கர் ஜெயகணேஷ் 

தேவகிக்கு அவள் மகள் மாலாவிடம் இருந்து கடிதம் வந்தது அதை லேப்-ல் வைத்து படித்தாள்.  அவள் பக்கம் பக்கமாக அவள் கணவனை பற்றி எழுதி இருந்தாள்.  உடனே கோபத்துடன்  தேவகி மகள் மாலாவிற்கு ஒரு கடிதம் எழுதினாள்.

09.2.99

சென்னை

அன்புள்ள மகளுக்கு,

அம்மா பாசத்துடன் எழுதுவது.  உன் கடிதத்தை படித்தவுடன் என்ன நலம் விசாரிக்க வேண்டியுள்ளது.  உன் கடிதத்தை பார்த்து எனக்கு நீரில் சோடியம் ஹைராசைடு போட்டது போல கோபம் வந்தது, என்ன செய்ய இந்த உலகத்தில் பொண்ணா பொறந்தாவே இப்படி தான் வாழ வேண்டி இருக்கு.  எனக்கும் செமஸ்டர் நேரம் சிலபஸ் முடிக்க வேண்டியுள்ளது, இல்லன நான் அங்க வந்து உனக்கு எல்லாம் சொல்லித்தருவேன்.  இங்க உள்ள பிரச்சனையே எனக்கு தலைக்கு மேல உள்ளது.  எனக்கு ட்ரான்ஸ்பர் என்று என் காதுபடவே எங்க டிபார்ட்மெண்ட்ல் பேசுகிறார்கள். அந்த பிரின்சிபால்க்கு தேவையான இளம் வயதான பெண்ணை எங்க டிபார்ட்மெண்ட்ல்  சேர்க்க தான் இந்த நடவடிக்கையாம்.  இந்த அம்பளைகளே இப்படித்தான் போல. எனக்கு இன்னும் ஒரு வருடம் தான் உள்ளது, இல்லேன்னா விருப்ப ஓய்வு வாங்கி வந்து இருப்பேன்.  அந்த பிரின்சிபால்லை பார்க்கும் போது எல்லாம் ஹைட்ரோ குளோரிக் அசிட் கொண்டு முஞ்சில் அடிக்க எண்ணம் தான் வருகிறது.  என்ன செய்ய யாரையாவது பழி வாங்க வேண்டும் என்றாலும் இந்த கெமிஸ்ட்ரி புத்தி தான் முதலில் வருகிறது.   நான் போன முறை உங்க வீட்டிற்கு வந்த போதே கவனித்தேன் உன் மாப்பிள்ளை குணம் சரியில்லை. தினமும் ஆபீஸ்-ல் இருந்து வந்த உடன் உன்னுடன் பழகும், பேசும் முறை சரியில்லை.  அப்படியே உங்க அப்பாவை உரிச்சி வைச்சது போல தான் இருந்தார்.  இப்படித்தான் உங்க அப்பாவும் ஆபீஸ்-ல் இருந்து வந்தவுடன் வீட்டிற்கு மளிகை சாமான் வாங்கிறேன் என்று வெளியில் செல்வார், பிறகு தான் தெரிந்தது  பக்கத்து தெருவில் ஒரு சின்ன வீடு வைத்து இருந்தார்.  நான் எந்த நேரமும் கெமிஸ்ட்ரி ப்ராஜெக்ட் என சிந்தனையில் இருந்தது அவருக்கு ரொம்ப சாதகமாக போயிடுச்சி.    பிறகு ஒரு நாள் உங்களை எல்லாம் அத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு லேபில் இருந்து கொண்டு வந்த துத்தநாகம் சாப்பிட்டு இன்றே சாக போகிறேன் என்று உங்க அப்பாவை மிரட்டினேன்.  அதற்கு பயந்து தான் பிறகு அந்த வீட்டிற்கு போகலை.  இது மாதிரி தான் நீயும் எதாவது சீக்கரம் முடிவு செய், நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.  உங்க அப்பா போன பிறகு தான் அவர் டைரியை படித்தேன், அப்பா தான் தெரிந்தது இருவரும் காலேஜ் படிக்கும் போதே லவ் பண்ணி இருந்தாங்கலாம்.  உங்க அப்பா அவளுக்கு மோதிரம், செய்யின் எல்லாம் வாங்கி தந்த விசயத்தை எல்லாம் எழுதி வைத்து இருந்தார். உன்னால கூட இப்ப நம்ப முடியுதா?  இப்படித்தான் நம்மள நல்ல ஏமாற்றி இருந்திர்கிறார்.  கடைசி வரை இதை எல்லாம் என்கிட்ட கூட அவர் சொல்லவில்லை.  இன்னும் ஒரு வருஷம் பொறுத்துக்க நான் அடுத்த வருடம் VRS -வாங்கி விட்டு உன்னுடனே வந்து தங்கி கொள்கிறேன்.   எனக்கும் இந்த கெமிஸ்ட்ரி கொஞ்சம் போர் அடிக்குது.  நீ உன் பேங்க் வேலையை பார், நான் வீட்டையும், உன் கணவனையும் கவனித்து கொள்கிறேன்.

உன் வீட்டுகாரரை எப்படி திருத்துவது என்று நான் வந்து சொல்லிதருகிறேன்.  கேட்டு நடப்பதும் நடக்காததும் உன் முடிவுமா,  இல்ல என்ன மாதரியே நீயும் கெஞ்ச நாளிலே விதவை ஆயிருவ அவ்வளவு தான் சொல்லிபுட்டேன். இதற்கு தான் நீ படிக்கும் போதே சொன்னேன் கெமிஸ்ட்ரி எடுக்க சொன்னேன், நீ கேட்கவில்லை.  நீ தான் கெமிஸ்ட்ரி பாடம் கஷ்டம் என்று கணிதம் படித்தாய், இல்லைணா உன் புருசன் முதல் நாள் குடிச்சிட்டு வரும் போதே கண்டு பிடித்து இருப்பாய், நல்ல வேலை நான் வந்து இருந்த போதாவது கண்டு பிடித்தோம்.  உன் கணவரை பார்க்கும்போது ஆல்கஹாலை அனு அனுவா ரசித்து குடிக்கிற மாதரி தெரியுது.  முதலில் உன் வங்கி பேலண்ஸ் சரிபார்த்து வை, குழந்தை பெற்று கொள்வதை கொஞ்ச நாள் தள்ளி வை.   மார்க்கெட்டில்       எதினோ-ஈஸ்ட்ரோ-டியோல் பில்ஸ்  மாத்திரை வாங்கி வைச்சிக்கோ, இல்லைணா புழங்காமல் இரு புரியுதா?   உடம்பை பார்த்துக்கோ நல்லா சாப்பிடு.  நான் செமஸ்டர் லீவில் அங்கு வந்து இந்த பிரச்சினையை தீர்த்துவைக்கிறேன். 
இப்படிக்கு
தேவகி (அம்மா)

பின்குறிப்பு : படித்தவுடன் கடிதத்தை கிழித்து விடவும்


மாலாவிற்கு அவள் அம்மாவின் கடிதம் கிடைத்தவுடன் ஆர்வமாக வாங்கி பேங்கில் உள்ள ஓய்வு அறைக்கு சென்று படிக்க ஆரம்பித்தாள், படித்த உடன் முகம் எல்லாம் வேர்த்தது, நம்ம அப்பாவா இப்படி என்று எண்ணினாள்.  அன்று முழுவதும் பேய் அறைந்தது போலவே இருந்தாள்.  மதியம் சாப்பிடும் போது இவள் தோழி கண்மணி என்ன பிரச்சனை உனக்கு, ஒரு மாதிரியாவே இருக்க என்று என கேட்டாள், ஒன்னும் இல்ல என்று கூறினாள்.  கண்மணி கல்யாணம் ஆகி 10 மாதம் ஆச்சி இன்னும் ஒன்னும் இல்ல என்கிற பிரச்சனையா என  கேட்டாள்.  தோரயமாக மாலா தன் பிரச்சனையை கூறினாள்.  ஆனால் கண்மணியோ இவ்வளவு தானா என்று ஒரு யோசனையை காதில் மெதுவாக கூறினாள். அன்று மாலை ஆபீஸ் முடிந்தவுடன் நேராக தனது கணவர் வேலை செய்யும் ஆபீஸ் சென்றாள்.  இந்த பக்கம் ஒரு வேலை விசயமாக வந்தேன், அப்படியே உங்க கூட வீட்டிற்கு போலாம் என்று வந்தேன் என கூறினாள்.  அவன் முதலில் தயங்கி இல்லம்மா ஆபீஸ்-ல் வேலை இருக்குது என்று கூறினான்.  நான் அதுவரை காத்து இருக்கிறேன் என சொன்ன பின்பு, உள்ளே சென்று தனது நண்பர்களிடம் இன்று குடிக்க வரவில்லை என்று சொல்லிவிட்டு உடனே வந்து விட்டான்.  போகும் வழியில் இவள் மல்லிகை பூ கேட்டாள், அவனும் வங்கி தந்தான், அடுத்து ஐஸ்கிரீம்  கேட்டாள் உடனே அழைத்து சென்றான், இருவரும் ஒரு ஐஸ்கிரீம் வாங்கி மாறி மாறி பரிமாறி ருசித்தனர்.  வீட்டிற்கு சென்றவுடன் சாப்பிட்டு முடித்துவிட்டு சந்தோசமாக இரவை வரவேற்று படுக்கையில் கவிதை எழுதினர்.  பின்பு கணவனிடம் கேட்டாள் தினமும் இது போல உங்க ஆபீஸ் வரவா என்று, கவிதை எழுதிய மயக்கத்தில் சரி என சம்மதித்தான்.  அதுபோல தினமும் இவள் வேலை முடித்து அவன் ஆபீஸ் செல்வதும், வரும் போது தினமும் நகைசுவையாக இருவரும் பேசுவதும் நாள்கள் ஓடின. மாலாவின் கணவன் கடந்த ஒரு மாதகாலமாக குடியை மறேந்தே விட்டான்.  தினமும் கவிதை எழுதி மாத கடைசியில் பிரசுரம் ஆனது, ஆம் அவள் கருத்தரித்தாள்.  அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.  மறுநாள் சாப்பிடும் போது கண்மணியிடம் விசயத்தை சொன்னாள், நன்றி நீ கொடுத்த ஐடியா தான் எனக்கு உதவியது என்றும், நல்ல வேலை நம்ம அம்மா யோசனையை கேட்க வில்லை என்றும்.  உடனே பேப்பர் எடுத்து அவள் அம்மாவிற்கு கடிதம் எழுதினாள். 

03.4.99

மதுரை

அன்புள்ள அம்மாவிற்கு

பாசத்துடன் எழுதுவது.  நான் இங்கு நலம்,  உனது கடிதம் கிடைத்தவுடன் தான் எனக்கு நான் படித்த கணிதம் புரிந்தது. எல்லா விடை தெரிய புதிர்க்கும் விடை கணிதத்தில் உள்ளது என்று.  என் கணவன் ஒன்றும் நம்ம அப்பாவை போல அலையவில்லை என்ன கொஞ்சம் குடித்தார் அவ்வளவு தான்,  அதுவும் இப்ப முற்றிலும் இல்லை.  நீ என்னை பற்றி கவலை பட வேண்டாம்.  நான் இப்ப உன் மகள் மட்டும் இல்லை, ஒரு குழந்தைக்கு தாயும் கூட, நீ இப்ப இங்கு வர வேண்டாம் செமஸ்டர் முடித்தவுடன் VRS  வாங்கி விட்டு வா இல்லைன இங்க டிரான்ஸ்பர் வாங்கி வந்து விடு.

அம்மா எப்பவுமே கெமிஸ்ட்ரியை விட கணக்கே பெட்டர். 

இப்படிக்கு

அன்பு மகள் மாலா

இந்த கடிதத்தை படித்தவுடன் தேவகிக்கு கண்ணீர் வந்தது, நம்ம மட்டும் அன்று நம்ம ஏகபத்தினி கணவரை பற்றி அந்த மாதிரி கடிதம் எழுதியதால் தான் நம்ம பொண்ணு இப்ப மனம்மாறி நல்லபடியா வாழ்கிறாள் என்று பெருமிதம் கொண்டாள். 

மனதுக்குள் நினைத்துக்கொண்டால் இப்பவும் சொல்றேன் கெமிஸ்ட்ரி தான் பெஸ்ட், நான் மட்டும் உனக்கு அவ்வளவு பெரிய கடித வினையூக்கி எழுதவில்லை என்றால் இந்த மனமாற்றம் நடந்திருக்குமா?

கெமிஸ்ட்ரியும் - கணிதமும் - சங்கர் ஜெயகணேஷ்
by jayaganesh sankar   on 26 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.