|
||||||||
சென்னை- சப்பான் தோக்கியோ நரிதா விமான நிலைய நேரடிப் போக்குவரத்து இனிதே தொடங்கியது. |
||||||||
சென்னை- சப்பான் தோக்கியோ நரிதா விமான நிலைய நேரடிப் போக்குவரத்து இனிதே தொடங்கியது. படம்: ANAவிமான நிறுவனத்தின் சென்னைப்பிரிவின் பொதுமேலாளர் திரு.தொம்மிட்சு (Mr.Yasuyuki Tommitsu San) அவர்கள் சென்னை விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்கும் காட்சி. பயணிகளை உபசரிப்பதில் சப்பானியர்களுக்கு நிகர் இல்லை, அனைத்துப் பண்பாடுகளையும் மதிப்பவர்கள் சப்பானியர்கள் என்பதை இந்த வரவேற்பின் மூலம் காணலாம். ANA இணையதளத்தில் தமிழ்!... உலகிலேயே முதல்முறையாக வெளிநாட்டு விமான சேவை நிறுவனம் ஒன்று இணையதளத்திலும் தமிழுக்கு இடமளித்திருப்பது பாராட்டுக்குரியது. -சப்பானிலிருந்து சே சதீசுகுமார்
சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானசேவை தொடக்கம் உள்நாட்டுப் போர்ச்சூழலால் நிறுத்தப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சென்னை-யாழ்ப்பாணம் விமானச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பலாலி விமான தளம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாகப் பெயர்மாற்றப்பட்டு அக்டோபர் 17 ஆம் நாள் முதல் விமானப் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லவேண்டினால் கொழும்பு வழியாகத்தான் செல்லவேண்டியிருந்தது. இதன்மூலம் இலங்கை வடக்குப்பகுதியின் பொருளாதாரம் மேம்பாடும், தமிழகத்துடனான உறவும் வலுப்பெறும்.
|
||||||||
by Swathi on 06 Nov 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|