LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

செட்டிநாடு சிக்கன் (Chettinad Chicken)

தேவையானவை :


கோழிக்கறி - 1 கிலோ

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 4

இஞ்சி - சிறுதுண்டு

பூண்டு - 15 பல்

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்

துருவிய தேங்காய் - அரை கப்

எண்ணெய் - அரை கப்

உலர்ந்த மிளகாய் - 8

கசகசா - 2 டேபிள் ஸ்பூன்

மல்லி - ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள் - அரைத் டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 3

எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்

கிராம்பு - 3

பட்டை - சிறு துண்டு

சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

ஜாதிக்காய் - அரைத் துண்டு

உப்பு - தேவையான அளவு


செய்முறை:


1.முதலில் நன்கு சுத்தம் செய்த கோழியை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினைத் பொடியாக நறுக்க வேண்டும். 

2.ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், துருவிய தேங்காய், கசகசா, பட்டை, கிராம்பு, சோம்பு,மல்லி விதை, சீரகம்,  திக்காய் ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுத்து இஞ்சி, பூண்டுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.எஞ்சியுள்ள எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கி, நறுக்கின 


வெங்காயத்தை அதில் போட்டு பொன்நிறமாக வதக்க வேண்டும். 

4.அதனுடன் கறிவேப்பிலை இலைகளையும் அரைத்து வைத்துள்ள மசாலாவினையும் சேர்க்க வேண்டும். நன்கு வதக்கிய பிறகு தக்காளி, மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிட வேண்டும்.

5.அதன் பிறகு கோழித் துண்டங்களைச் சேர்த்து சிறிது நேரம் வேகவிட வேண்டும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும். கோழி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

CHETTINAD CHICKEN

Ingredients for CHETTINAD CHICKEN  : 


Chicken - 1 Kg,

Large Onion - 1,

Tomato - 4,

Ginger - Small Piece,

Garlic - 15 Cloves,

Coriander Leaves - Little,

Curry Leaves - Little,

Cumin - 1 Tbsp,

Shredded Coconut - 1/2 CUp,

Oil - 1/2 Cup,

Dry Chillies - 8,

Poppy Seeds- 2 Tbsps,

Coriander - 1 Tbsp,

Chilli Powder - 1 Tbsp,

Turmeri Powder - 1/2 Tbsp,

Cardamom - 3,

Lemon Extract - 1 Tbsp,

Cloves - 3,

Cinnamon - Little, 

Ani Seeds - 1 Tbsp,

Walnut - 1/2 piece,

Salt as needed.


Method to make CHETTINAD CHICKEN :


1. Clean the chicken and make into large pieces. Chop the onions, tomatoes and ginger garlic. 


2. Heat Oil in a pan then add chillies, shredded coconut, poppy seeds, cinnamon, cloves, aniseeds, coriander seeds, cumin, walnut and fry it well. Then grind it along with ginger and garlic. Make it a soft paste. 


3. Heat oil in a pan then add onions and fry well. 


4. Then add curry leaves and ground masala along with it. Then add tomato, chilli powder and turmeric powder and mix it well. 


5. Then add the chicken pieces and allow it to boil for few mins. Then add 2 cups of water, lemon extract and salt and mix it well. Then boil it in a medium heat. Boil until the chicken cooked. Garnish with coriander leaves.


Tasty CHETTINAD CHICKEN is ready to serve.

by nandhini   on 09 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.