LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பிச்சை புகினும் கற்கை நன்றே!

கற்கை நன்றே; கற்கை நன்றே; 
பிச்சை புகினும் கற்கை நன்றே

என்கிறது வெற்றி வேற்கை. பிச்சை எடுத்தாவது கல்வி கற்கலாம் என்பதே இதன் பொருள். பிச்சை எடுத்தே கல்வி கற்கும் ஒரு சிறுவன் இதற்கு உதாரணமாகத் திகழ்ந்து வருகின்றான். மற்றவர்களுக்குப் பாடமாகவும் விளங்கி வருகின்றான்.  

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் கஸ்ராலி பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  இவர்களின் ஒரு மகனான பவன் கிஷாங்கிர் தேவடே (வயது 15) பிலோலி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.

பவனின் பெற்றோர் பிச்சை எடுப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். அவர்கள் வருமானம் குடும்பம் நடத்தவே போதுமானதாக இல்லை.  இதனால் பவனின் கல்விக்கான செலவுகளை அவர்களால் கவனிக்க முடியவில்லை.

மற்ற குழந்தைகள் போல் இல்லாமல்  பவன் தனது குடும்பத்தினரின் செலவுகளுக்காக பஸ் நிலையத்திற்கு சென்று பிச்சை எடுத்து வருகிறான்.

இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும்  பள்ளிச் சீருடை அணிந்து கொண்டு, பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளிடம் கையில் உள்ள கிண்ணத்தை நீட்டிப் பிச்சை கேட்கிறான்.

பள்ளிச்சீருடையில் இருக்கும் பவனுக்கு உதவி செய்யும் விதத்தில் அவர்கள் ரூபாய்.1 அல்லது  2 என பிச்சை இடுகின்றனர்.

குடும்பச் செலவுகளுக்கும், படிப்புச் செலவுகளுக்கும் இது போதுமானதாக இல்லாததால்,  பிற பொது இடங்களுக்கும் சென்று பவன் பிச்சை எடுத்து வருகிறான்.

"பவன் வகுப்பில் நன்றாகப் படிப்பவன்.  ஆனால் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு போதிய வசதி அவனிடமில்லை" என பவனின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

இதுபற்றி பவன் கூறும்போது,  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிச்சை எடுப்பதில் 200 ரூபாய் கிடைக்கிறது.  குடும்பத்தில் வசதியே இல்லாவிட்டாலும் தொடர்ந்து பிச்சை எடுத்தே முழுவதும் படித்து முடிக்க தீர்மானித்துள்ளேன்" என கூறியுள்ளான்.

பிச்சை எடுத்தாவது நன்றாகப் படித்து முடிப்பேன் என்று கூறும் பவன் ஒரு முன்னுதாரணச் சிறுவனாக விளங்கி வருகின்றான்.

by Swathi   on 11 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் - கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு! வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் - கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு!
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் உடல் அடக்கம் ராணுவ மரியாதையுடன் நடந்தது! காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் உடல் அடக்கம் ராணுவ மரியாதையுடன் நடந்தது!
காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 2 தமிழக வீரர்கள் உள்பட   40 பேர் பலி! காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 2 தமிழக வீரர்கள் உள்பட 40 பேர் பலி!
மத்திய அரசு துறைகளில் 4.12 லட்சம்  பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தகவல்! மத்திய அரசு துறைகளில் 4.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தகவல்!
பசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது-  நாசாவின் பாராட்டு! பசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு!
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்! மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்!
பாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு! பாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு!
வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்! வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.