LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கான தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு!

சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கான தமிழக அரசு அறிவிப்பை,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

தமிழ்த்தாய் விருது புவனேசுவரம் தமிழ்ச் சங்கத்துக்கும், கபிலர் விருது மி.காசுமானுக்கும், உ.வே.சா.விருது நடன காசிநாதனுக்கும், கம்பர் விருது க.முருகேசனுக்கும் அளிக்கப்படும். 

சொல்லின் செல்வர் விருது ஆவடிக்குமாருக்கும், ஜி.யு.போப் விருது கோ.சந்திரசேகரன் நாயருக்கும், உமறுப்புலவர் விருது நசீமா பானுவுக்கும், இளங்கோவடிகள் விருது சிலம்பொலி சு.செல்லப்பனுக்கும், அம்மா இலக்கிய விருது உலகநாயகி பழனிக்கும், சிங்காரவேலர் விருது பா.வீரமணிக்கும் அளிக்கப்படும்.

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது கவிஞர் வைரமுத்துவின் மகன், மதன் கார்க்கிக்கு (கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை) அளிக்கப்படும். 

இந்த விருதுகளில் தமிழ்த்தாய் விருது ரூ.5 லட்சத்துடன் பாராட்டுக் கேடயம், சான்றிதழ் அடங்கியதாகும். மற்ற விருதுகள் ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், பொன்னாடை மற்றும் தகுதியுரையும் அடங்கியதாகும்.

கடந்த ஆண்டுக்கான (2018) சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, அரிமா மு.சீனிவாசன், குப்புசாமி, மருத்துவர் அக்பர் கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செந்தில்குமார் என்ற கிரிதாரிதாஸ், பழனி அரங்கசாமி, எஸ்.சங்கரநாராயணன், ச.நிலா ஆகியோருக்கும் அளிக்கப்பட உள்ளன.

இந்த விருது ஒவ்வொன்றும் தலா ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், தகுதியுரை, பொன்னாடை ஆகியன அடங்கியதாகும்.

2018-ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது டென்மார்க் நாட்டின் ஜீவகுமாரனுக்கும், இலக்கண விருது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கி.பாரதிதாசனுக்கும், மொழியியல் விருது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ச.சச்சிதானந்தத்துக்கும் அளிக்கப்படும். இந்த விருதுகள் ஒவ்வொன்றும் தலா ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், தகுதியுரை, பொன்னாடை அளிக்கப்படும்.

மாவட்டங்களில் தமிழ்ப் பணி ஆற்றி வருவோருக்காக 32 மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு விருதுகள் அளிக்கப்பட உள்ளன. அதன்படி, யு.எஸ்.எஸ்.ஆர்.கோ.நடராஜன் (சென்னை), அமுதா பாலகிருஷ்ணன் (திருவள்ளூர்), இதயகீதம் ராமானுஜம் (காஞ்சிபுரம்), சிவராஜி (வேலூர்), கவிரிஷி மகேஷ் (கிருஷ்ணகிரி), சம்பந்தம் (திருவண்ணாமலை), செ.வ.மதிவாணன் (விழுப்புரம்), இரா.சஞ்சீவிராயர் (கடலூர்), பெ.ஆறுமுகம் (பெரம்பலூர்), அ.ஆறுமுகம் (அரியலூர்), ஆ.கணபதி (சேலம்), பொ.பொன்னுரங்கன் (தருமபுரி), முனைவர் சி.தியாகராசன் (நாமக்கல்), வெ.திருமூர்த்தி (ஈரோடு), கவிமாமணி வெ.கருவைவேணு (கரூர்), முனைவர் மா.நடராசன் (கோவை), மு.தண்டபாணிசிவம் (திருப்பூர்), கோ.கந்தசாமி (நீலகிரி), வீ.கோவிந்தசாமி (திருச்சி), மு.முத்து சீனிவாசன் (புதுக்கோடை), முனைவர் சே.குமரப்பன் (சிவகங்கை), த.உடையார்கோயில் (தஞ்சாவூர்), நா.சக்திமைந்தன் (திருவாரூர்), மு.மணிமேகலை (நாகப்பட்டினம்), சுப்பையா (ராமநாதபுரம்), இலக்குமணசுவாமி (மதுரை), வதிலைபிரபா (திண்டுக்கல்), சு.குப்புசாமி (தேனி), க.அழகர் (விருதுநகர்), பே.ராஜேந்திரன் (திருநெல்வேலி), ப.ஜான்கணேஷ் (தூத்துக்குடி), கா.ஆபத்துக்காத்தபிள்ளை (கன்னியாகுமரி).
தமிழ்ச் செம்மல் விருது பெறும் ஒவ்வொரு விருதாளருக்கும் ரூ.25 ஆயிரம் விருதுத் தொகையுடன், தகுதியுரை, பொன்னாடை அளிக்கப்படும். இந்த விருதுகள் வருகிற 19-ந் தேதி, தலைமைச் செயலகத்தில் அளிக்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

by Mani Bharathi   on 19 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.