Tamil Dictionary Baby Names Movies Tamil Sites Temples Events eBooks WebTV Photos Videos FM Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
  Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்     தமிழ் பள்ளிகள்-Tamil School    இந்தியா (India)

Classifieds Search

Category  Sub Category 
Keys   
காங்கோ தமிழ்ப்பள்ளி
Country : Democratic Republic of the Congo
State : Matadi
City : Kinshasa
Address : C/O English International School, 1154, Avenue de Kassai, Kinshasa, DRC
Contact Number : +243815054333
Email Id : tycakinshasa@gmail.com
Website : tycacongo.com

காங்கோ தமிழ்ப்பள்ளியானது காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டின் தலைநகர் கின்சாசாவில் காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றத்தினரால் நடத்தப்படும் தன்னார்வாலர் தமிழ்ப்பள்ளி ஆகும். கின்சாசாவில் வாழும் தமிழ்க் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு நம் அருமைத் தாய் மொழியாம் தமிழைக் கற்பிக்கும் நோக்கத்தில் கடந்த 2013 ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கித் தொய்வில்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு அமர்வுகளாக நடைபெறும் இப்பள்ளியானது மொத்தம் இருபத்து ஏழு குழந்தைகளுக்கு தமிழ் எழுத,படிக்க,பேச கற்றுக் கொடுக்கிறது. பதினொன்று தன்னார்வலர் ஆசிரியர்களைக் கொண்டு நடைபெற்று வருகிறது. தலைநகர் கின்சாசாவில் அமைந்துள்ள இங்கிலீசு இன்டர்நேசனல் பள்ளி ( English International School of Kinshasa ) பள்ளியின் தாளாளர்கள் திரு.கண்ணன் மற்றும் திருமதி.கிரிசா கண்ணன் இவர்களின் ஓத்துழைப்பினால், அப்பள்ளி வளாக வகுப்பறையில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் பள்ளி சிறப்பாக நடைபெற்று வருகிறது, இவர்களிருவருக்கும் நன்றிகள் ! வேலை, தொழில் என்று கடல் கடந்து வந்தாலும் தாய்த்தமிழை இளந்தலைமுறையினருக்கு கற்பிப்பதன் மூலம் நம் தமிழ் இனத்தின் வரலாறு,கலைப் பண்பாட்டுக் கூறுகளை தலைமுறைகள் தாண்டியும் தழைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் காங்கோ தமிழ்ப்பள்ளி இயங்குகிறது.

குறிப்பிடத்தக்கவை :

  • பள்ளி தொடக்கம் : மார்ச் 2013
  • பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை, மொத்தம் : 27 மாணவர்கள்
  • சனிக்கிழமை அமர்வு : 18 மாணவர்கள்
  • ஞாயிற்றுக்கிழமை அமர்வு : 9 மாணவர்கள்
  • ஆசிரியர்கள் எண்ணிக்கை,
  • சனிக்கிழமை : 7 +1
  • ஞாயிற்றுக்கிழமை : 3+1
  • ஆசிரியர் மாணவர் விகிதம் : 1 ஆசிரியர் : 3 மாணவர்கள்
 More Links..
- Tamil Worksheets for kids
- தமிழ் இணையக் கல்விக்கழகம்
 Add Your Tamil Classifieds
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Category

  தமிழ் பள்ளிகள்-Tamil School  தமிழ் பள்ளிகள்-Tamil School
  தமிழ் சங்கங்கள்-Tamil Sangam  தமிழ் சங்கங்கள்-Tamil Sangam
  நடனப் பள்ளிகள்-Dance School  நடனப் பள்ளிகள்-Dance School
  பாரம்பரிய பயிற்சிகள்- Classical Trainings  பாரம்பரிய பயிற்சிகள்- Classical Trainings
  சிற்றிதழ்கள்-Tamil Magazine  சிற்றிதழ்கள்-Tamil Magazine
  தமிழ் சேவைகள்-Tamil services  தமிழ் சேவைகள்-Tamil services
  இயற்கை - சித்த மருத்துவம் (Siddha & Naturopathy)  இயற்கை - சித்த மருத்துவம் (Siddha & Naturopathy)
  இயற்கை விவசாயிகள் - Organic Farmers  இயற்கை விவசாயிகள் - Organic Farmers

Recently Added

காங்கோ தமிழ்ச்சாரல் காங்கோ தமிழ்ச்சாரல்
காங்கோ தமிழ்ப்பள்ளி காங்கோ தமிழ்ப்பள்ளி
காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம் காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம்
தமிழ்ச்சாரல் - மாத இதழ் - காங்கோ மக்களாட்சி குடியரசிலிருந்து வெளிவருகிறது தமிழ்ச்சாரல் - மாத இதழ் - காங்கோ மக்களாட்சி குடியரசிலிருந்து வெளிவருகிறது
SIVA SAKTHI SIDDHA CLINIC SIVA SAKTHI SIDDHA CLINIC
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்