பனைநிலம் தமிழ்ச் சங்கம் (PANAI NILAM TAMIL SANGAM)

Edit This

பனைநில வரலாறு 

 


பனைநிலம் என்பது பால்மேட்டோ ஸ்டேட் என்றழைக்கப்படும் தென் கரோலினாவின் தமிழாக்கம். இங்கு நிறைய பனைமரங்கள் அதிகமாக எங்கும் விரவி இருப்பதால் அமெரிக்கர்கள் இதனை பனைமாநிலம் என்று பெயர் வழங்கி இருப்பது சாலப்பொருத்தம்.  சங்க காலத்திலிருந்து திரைகடல் கடந்து திரவியம் தேடிய தமிழ்ர்களின் சந்ததிகளான நாம் இன்றைய நாகரீக  காலத்தில், உலகின் எட்டுத்திக்கிலும் பரவி புகழ் பெற்று விளங்குவது யாவரும் கண்டுவரும் நிதர்சனம்.  

அந்த வரிசையில் பூலோகத்தின் இன்னொரு கோடியில், அன்றைய தமிழர்களின் இன்றைய சந்ததிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லச்டன் தமிழ்மக்கள் ஒன்றிணைந்து ஆரம்பிச்ச சங்கம் தான் இந்த பனைநிலம் தமிழ்ச் சங்கம். 


சங்க உறுப்பினர்களுக்கு சங்கவிழாக்கள் என்பது, எப்போதுமே திருவிழாக்களே. கொடைவிழா மற்றும் பொங்கல் விழாக்கள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்கள்.  இதர விழாக்களும், கடற்கரைக்கூட்டங்களும், இலக்கிய மன்றங்களும், மற்றும் தாய்மொழி ஆராய்ச்சி, மற்றும் தமிழ்வழி ஆராய்ச்சிக் கூட்டங்களும் வருடந்தோறும் சிறப்பாக நடந்து வரும் நிகழ்ச்சிகள்.  

இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கு அருமையாக நடத்தப்பட்டு வரும் மழலைப் பள்ளி. இங்கு பிறந்து வரர்ந்து வரும் தமிழ்ர்களின் இளந்தளிர்களுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழ் வழிக் கல்வி மிகவும் உபயோகமுள்ள அமைப்பாகும்.
 

சார்லஸ்டன் நிறைய கடற்கரைகளும் தீவுகளும், சதுப்பு நிலம், மலைகள், சமதளங்கள் என்று பலவித இயற்கையமைப்புக்கள கொண்டது 



தென்கரோலினா சுற்றுலாவினால் சிறப்படைந்த மாநிலம். சார்லஸ்டன், சவானா, மெர்ட்ல் கடற்கரை போன்ற சுற்றுலாத் தலங்கள் நிறைய இருக்கின்றன. அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் முக்கியத்துவம் பெற்றிருந்த போர்க்களங்கள் பல தென்கரோலினாவில் உண்டு.  சார்லஸ்டனில் இருக்கும் தெற்கத்திய உணவுக் கூடங்களும், அவற்றில் இசைக்கப்படும் வாத்தியக் குழுக்களும் பெயர்பெற்றவை. சார்லஸ்டன் மக்கட்தொகை 120,000. அனைவரும்  பல்வேறு கூட்டுக்கலாச்சாரங்களுடன், பல்வேறு மொழி மற்றும், பண்பாட்டு முறைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.


 



Reviews & Ratings

No Reviews Found