LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு !!

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 32 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும், சுயேட்சை உறுப்பினர்கள் 2 இடங்களையும் பிடித்தனர்.

 

மொத்தமாக 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையில் 36 உறுப்பினர்களை கொண்ட கட்சி மட்டுமே குறைந்தபட்ச மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். போட்டியிட்ட கட்சிகளில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு ஆட்சி அமைப்பத்தில் இழுபறி நிலை நடந்து வருகின்றது. அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி அடிப்படையில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு வருமாறு பா.ஜனதா கட்சிக்கு டெல்லி கவர்னர் நஜீப் ஜங்க் அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று ஆளுனரை சந்தித்த பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளரான ஹர்ஷ்வர்தன், தங்களுக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால் ஆட்சியமைக்க இயலாது என கூறினார்.

 

இதை தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டாவது பெரிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி கவர்னர் நஜீப் ஜங்கை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளார்.

 

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி டெல்லி ஆட்சி பொறுப்பை ஏற்க பற்றாக்குறையாக உள்ள 8 எம்.எல்.ஏ க்களின் ஆதரவை நிபந்தனை ஏதுமின்றி வழங்க தயாராக உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் ஷகீல் அகமது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் பலம் 28 ஆக உள்ளது. பா.ஜ.க. ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் நிபந்தனையற்ற ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை அமைப்பது சிறந்தது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Congress offers unconditional support to Aam Aadmi Party

Congress has offered unconditional support to Arvind Kejriwal's Aam Aadmi Party should they be ready to form the next government in Delhi.

by Swathi   on 13 Dec 2013  0 Comments
Tags: Arvind Kejriwal   AAP   Congress Support   Congress Support AAP   Delhi Government   Unconditional Support   காங்கிரஸ் ஆதரவு  
 தொடர்புடையவை-Related Articles
2014-பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தமிழகத்தில் பெற்ற வாக்குகள் 2014-பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தமிழகத்தில் பெற்ற வாக்குகள்
ஏன் ஆம் ஆத்மியில் நான் சேர்ந்தேன் ? - ஞானி ஏன் ஆம் ஆத்மியில் நான் சேர்ந்தேன் ? - ஞானி
வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !! வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !!
விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !! விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !!
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி கெஜ்ரிவாலுக்கு எதிராக உண்ணாவிரதம் -கலகத்தை ஆரம்பித்து வைத்தார் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி கெஜ்ரிவாலுக்கு எதிராக உண்ணாவிரதம் -கலகத்தை ஆரம்பித்து வைத்தார்
சில்லரை வர்த்தகக் கொள்கை-ஆத்மி கட்சியை சேர்ந்த கேப்டன் கோபிநாத்  கருத்து வேறுபாடு சில்லரை வர்த்தகக் கொள்கை-ஆத்மி கட்சியை சேர்ந்த கேப்டன் கோபிநாத் கருத்து வேறுபாடு
ஆம் ஆத்மி தமிழக கட்சிக்கு ஆதரவை கோரிய பிரசாந்த் பூஷனிடம் நிபந்தனைகள் விதித்த கூடங்குளம் உதயகுமார் ஆம் ஆத்மி தமிழக கட்சிக்கு ஆதரவை கோரிய பிரசாந்த் பூஷனிடம் நிபந்தனைகள் விதித்த கூடங்குளம் உதயகுமார்
டெல்லி மக்களுக்கு இலவச குடிநீர் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால் !! டெல்லி மக்களுக்கு இலவச குடிநீர் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.