LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

சரியான கட்டணத்தை நிர்ணயித்து ஆட்டோ ஒட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் விடிவுகாலம் பிறக்க உடனடியாக வழி செய்ய வேண்டும் - லோக் சத்தா கட்சி கோரிக்கை

ஆட்டோக்கள் பொது போக்குவரத்தில் இன்றியமையாத இணைப்பாக  இருந்த போதிலும், அடுத்தடுத்த அரசுகளின் கவனக் குறைவால் இத்துறை மிகவும் பாதிக்கப்பட்டு நலிவடைந்து வருகின்றது. பொது மக்களும் தனியார் வாகனங்களை நாட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளனர். மற்ற பல மாநிலங்களில் உள்ளது போல ஆட்டோ கட்டணத்தை சீரமைத்து இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் இதற்கு முன்னதாக கடந்த 2007-ஆம் ஆண்டு கிலோ மீட்டருக்கு ரூ.6 ஆக மாற்றப்பட்டது.அப்போது பெட்ரோல் விலை ஐம்பத்து ஐந்து ருபாய். தற்போது பெட்ரோல் விலை சுமார் எழுபது ரூபாயாக இருக்கிறது.    எனவே, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் இன்று கண்டிப்பாக ஆட்டோவை இயக்க முடியாது என்பது தெளிவாகிறது.கட்டணத்தை சீர் செய்ய கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து, ஆட்டோ ஒட்டுனர்களுக்கும், பொது மக்களுக்கும் பெரும் இடையூறுகளை விளைவித்துள்ள அரசுகள், மாறாக ஆட்டோ ஓட்டுனர்களிடம் மீட்டர் போடாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கோடிக்கணக்கில் அபராதம் (போக்குவரத்து துறையின் கணக்குப்படி 2010-ல் சுமார்15 கோடி) வசூலித்து வருகின்றன. இது மக்கள் நலன் பேணும் அரசிற்கு அழகல்ல.
 
இதனால் காலப்போக்கில் ஆட்டோக்களுக்கான வரவேற்பு குறைந்து வருவதுடன் பொது மக்கள் பெருமளவில் தனியார் வாகனங்களில் செல்கின்றனர். இருப்பினும் இப்போதுள்ள மிகக் கடினமான சூழ்நிலையிலேயே தினமும் பதினைந்து லட்சம் பயணிகளுக்கு மேல் சேவை அளித்து வருவதே ஆட்டோக்களின் முக்கியத்துவத்திற்கு அத்தாட்சி.
சென்னையில் நிலைமை இவ்வாறு இருக்க பெங்களூர், மும்பை, புனே போன்ற பல "இந்திய" நகரங்களிலேயே அரசாங்கங்கள் கட்டணங்களை பெட்ரோல் மற்றும் இதர காரணிகளின் விலைக்கு ஏற்றார் போல மாற்றி அமைத்து ஆட்டோக்களும் பொது மக்களும் சிரமமின்றி பயணம் செய்ய வழி செய்துள்ளனர். இந்த நகரங்களில் கட்டண நிர்ணயத்திற்கென சுதந்திரமாக செயல்படும் நிரந்தர குழு அமைக்கப்பட்டு, அக்குழு பெட்ரோல் விலை மாறும் தருணங்களில் எல்லாம் கட்டணத்தையும் உடன் மாற்றி அமைக்கிறது. புதிய கட்டணத்தின் படியான அட்டவணை பின்னர் அனைத்து ஆட்டோக்களுக்கும் விநியோகிக்கப்பட்டு பொது மக்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. புதிய கட்டணம் இவ்வாறு உடனுக்குடன் அமலுக்கு வருகிறது.
எனவே, இப்பிரச்சனை தீர்ந்து, பொது மக்களும் ஆட்டோ ஓட்டுனர்களும் விடிவு பெற வேண்டுமானால், கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
1. ஆட்டோ கட்டணத்தை பெட்ரோல் விலைக்கு ஏற்றார் போல அவ்வப்போது மாற்றிட, தகுந்த பார்முலா உருவாக்கப்பட்டு, அதை நிர்வகிக்கவும் விலையை கணிக்கடவும் தன்னிச்சையாக செயல்படும் குழு அமைக்கப்பட வேண்டும்.
2. மீட்டரில் தூரத்தைப பார்த்து, அரசே வழங்கும் அட்டவணையில் விலையைக்  கணக்கிடும் முறை அமல்படுத்தப்பட வேண்டும்.
3. இந்த குழு உடனடியாக செயல்பட்டு பார்முலாவை அறிமுகம் செய்து கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
 
இதற்காக பல்வேறு தன்னார்வ சமூக அமைப்புகள், ஆட்டோ யூனியன்கள் முதலியவற்றை ஒருங்கிணைத்து லோக் சத்தா கட்சி தொடர்ந்து அரசாங்கத்தை வலியுறுத்தவும் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள ஆட்டோ சங்கங்களையும், பொது மக்களையும் அழைக்கிறது.

by Swathi   on 24 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.