LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

கப் கேக் (Cup Cake)

தேவையானவை :


மைதா - 250 கிராம்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

சர்க்கரை - 200 கிராம்

வெண்ணெய் - 100 கிராம் (உருகியது)

முட்டை - 2

பால் - 120 மில்லிலிட்டர்

வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்



ஃப்ராஸ்டிங் செய்ய தேவையானவை :


அன்சால்டட் பட்டர் - ஒரு கப்

பவுடர்ட் சுகர் - 2 கப்

துருவிய தேங்காய் - ஒரு கப்

ப்ளு பெரி - அலங்கரிக்க


செய்முறை:


1. முதலில் முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். சல்லடையில் மைதா மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து சலித்துக் கொள்ளவும்.வெண்ணெய், சர்க்கரை, முட்டை, எசன்ஸ் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு நைசாக மிருதுவான பதத்தில் அடித்துக் கொள்ளவும்.


2. பின் மைதா கலவை கொஞ்சம், பால் கொஞ்சம் என சிறிது சிறிதாக கலவையில் போட்டு பேஸ்ட் பதத்தில் கலக்கிக் கொள்ளவும். கட்டி இல்லாமல் நைசாக இருக்க வேண்டும்.பின் கப் கேக் ட்ரேவில், கப்களை வைத்து மாவினை முக்கால் வாசி  வரும் வரை ஊற்றிக் கொள்ளவும்.


3. 350 டிகிரிக்கு முற்சூடு செய்யப்பட அவனில் ஒரு 20 நிமிடம் வைத்து, கேக் பொன்னிறமாக உப்பி வந்ததும் அணைக்கவும்.கேக்கினை நன்றாக ஆற விடவும். க்ரீமையும், தேங்காய் துருவலையும் கலக்கி ஒரு சுகர் கோட்டிங் மட்டும் போட்டு விடவும். சுவையான கப் கேக் ரெடி.


4. இனிப்பு விரும்பிகளுக்கு வெண்ணெயையும், சக்கரையும் நன்கு கலக்கி, கேக்கின் மீது போட்டு, கோகனட் துருவலில் முக்கி எடுத்து ப்ளு பெரிக் கொண்டு அலங்கரிக்கவும். 

Cup Cake

Ingredients for Cup Cake:


Maida - 250 g,

Baking Powder - 1 Tsp,

Sugar - 200 g,

Butter - 100 g,

Egg - 2,

Milk - 120 ml,

Vanilla Essence - 1 Tsp.


Ingredients for Frosting :


Unsalted Butter - 1 Cup,

Powdered Sugar - 2 Cup,

Shredded Coconut - 1 Cup,

Blue Berry - for decoration.


Method to make Cup Cake : 


1. Blend the egg in the beater. Mix up the maida nad baking powder and seive it well. Add butter, egg, essence one by one all together. Blend it softly.

2. Add maida mixture and milk mixture along with them. Make it a paste. Dough should be soft. Keep the cups on the cup tray. Then add 3/4 flour in each cup. 

3. Keep this in a 350 degree preheated oven for 20 minutes. When cake turns golden color turn off it. Let it be cooled. Mix up the shredded coconut and cream and apply the sugar coating on Cup cake. 


Tasty Cup Cake is ready to eat.

by kanika   on 25 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.