LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

செவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்களை கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்தது!

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர், பண்டைக்காலத்தில் நீரோடைகள் மற்றும் ஏரிகள் நிறைந்த பகுதியில் களிமண் தாதுக்களை கண்டறிந்து ஆராய்ச்சி செய்கிறது.

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது,

அதன் பின்னர், அது ஆயிரக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்பி உள்ளது, 13 மைல்கள் சுற்றித் திரிந்து 1,207 அடி  உயரம் ஏறி அது தற்போது ஷார்ப் மவுண்டின் பக்கவாட்டில் உள்ளது. 

இது கேல் பள்ளத்தின் உள்ளே அமைந்துள்ளது, அங்கு ஒரு காலத்தில் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீரோடைகள் மற்றும் ஏரிகள்  இருந்து உள்ளன.

கேல் கேட்டர் ஒரு பரந்த மற்றும் வறண்ட பண்டைய ஏரிப் படுக்கையாகும், அதன் மையத்தில் 16,404 அடி உயரமுள்ள மலை உள்ளது. மவுண்ட் ஷார்ப் சிகரம் பள்ளத்தின் விளிம்பை விட உயரமாக உள்ளது.
கியூரியாசிட்டி அந்த பகுதியில் களிமண் தாதுக்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இது மேற்பரப்பின் 22 மாதிரிகளை துளையிட்டு  எடுத்து உள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வாளர்  கிறிஸ்டன் பென்னட் கூறுகையில், "நாங்கள் 10 ஆண்டுகளாக இந்த பகுதியின் சுற்றுப்பாதை படங்களை ஆய்வுச் செய்து வருகிறோம், இறுதியாக நாங்கள் தற்போது இதனை நெருக்கமாகப் பார்க்க முடிகிறது என கூறினார்.

கியூரியாசிட்டி தனது பணியின் போது, ஷார்ப் மலையில் அதிக அளவு களிமண் தாதுக்களை ஆய்வு செய்தது. கியூரியாசிட்டி செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாய் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டரால் இந்த தாதுக்கள் முதலில் அங்கு இருப்பது கண்டறியப்பட்டன.

சமீபத்தில், ரோவரின் கேமரா டீல் ரிட்ஜ் வெளிப்புறம் மற்றும் ஸ்ட்ராத்டன் ஆகியவற்றின் பனோரமாவைப் படம் பிடித்தது, இது அலை, வண்டல் அடுக்குகளைக் கொண்டது, இது காற்று, நீர் அல்லது இரண்டாலும் ஏற்பட்டு இருக்கலாம்.

"இந்த பாறைகளில் பதிவு செய்யப்பட்ட பண்டைய ஏரி சூழலில் ஒரு பரிணாம வளர்ச்சியை நாங்கள் காண்கிறோம்" என்று கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்  களிமண் ஆய்வு  இணைத் தலைவரான வலேரி ஃபாக்ஸ் கூறினார்.

by Mani Bharathi   on 13 Aug 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
Dr. V.R.S. Sampath, founder,Madras Development Society  Convener, World Tamils Economic Conference Dr. V.R.S. Sampath, founder,Madras Development Society Convener, World Tamils Economic Conference
‘குட்டிகளின் கெட்டி’ கவி  - அழ.வள்ளியப்பா ‘குட்டிகளின் கெட்டி’ கவி  - அழ.வள்ளியப்பா
நடுவயதிற்கு முன்னே  மறைந்த நற்றமிழ்ப்பரிதி  -பரிதிமாற் கலைஞர் நடுவயதிற்கு முன்னே  மறைந்த நற்றமிழ்ப்பரிதி  -பரிதிமாற் கலைஞர்
ஊடறு—அனைத்துலக பெண்கள் மாநாடு ஊடறு—அனைத்துலக பெண்கள் மாநாடு
திருநங்கைகளுக்கான சிறப்புப் பிரிவு திருநங்கைகளுக்கான சிறப்புப் பிரிவு
யாழ்ப்பாணத்தில் உலகத் திருக்குறள் மாநாடு யாழ்ப்பாணத்தில் உலகத் திருக்குறள் மாநாடு
அண்ணா பல்கலைக் கழகம்  - தமிழில் பெயர்ப் பலகை அண்ணா பல்கலைக் கழகம்  - தமிழில் பெயர்ப் பலகை
ஜனவரி 16ஆம் தேதியைத் தேசிய திருவள்ளுவர் தினமாக   டாக்டர் பாரிவேந்தர் எம்பி கோரிக்கை  ஜனவரி 16ஆம் தேதியைத் தேசிய திருவள்ளுவர் தினமாக   டாக்டர் பாரிவேந்தர் எம்பி கோரிக்கை 
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.