|
||||||||
கத்திரிக்காய் புளிக் குழம்பு (Brinjal Tamarind Sauce) |
||||||||
தேவையானவை : கத்திரிக்காய் - 5 பெரிய வெங்காயம் - 1 (பொடித்தது) பூண்டு - 10 பற்கள் நல்லெண்ணை - தாளிக்க சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - தேவைகேற்ப பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் புளி - சிறிய எலுமிச்சை அளவு தேங்காய் - 5 துண்டு உப்பு - தேவையான அளவு செய்முறை : 1.தேங்காய் துண்டுகளை மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.கத்திரிக்காய்களை முழுவதுமாக நறுக்காமல் முக்கால் பாகத்திற்கு காய்களைக் கீறிக்கொள்ளவும். 2.ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு, உளுந்து தாளித்ததும், சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பிறகு பூண்டை வதக்கவும், கீறி வைத்துள்ள கத்திரிக்காய்களை சேர்த்து வதக்கவும்.காயை வதக்கும் போது மிதமான தீயில் வைத்து, சிறிது நீர் விட்டு வதக்கவும். 3.கத்திரிக்காய் பாதி வெந்த நிலையில், புளியை கரைத்து அதில் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து சட்டியில் ஊற்றவும்.குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போது, மிக்சியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான புளி குழம்பு அரை மணிநேரத்தில் தயார். |
||||||||
Brinjal Tamarind Sauce | ||||||||
Ingredients for Brinjal Tamarind Sauce:
Brinjal-5 Large Onion-1 (Chopped) Garlic-10 Flakes Sesame Oil-for Tempering Sambar Powder-2 Tsp Curry Leaves-as Needed Asafoetida-1/4 Tsp Tamarind-Small Lemon Size Coconut-5 Pieces Salt-as Needed
Procedure to make Brinjal Tamarind Sauce:
1. Grind the coconut along with water. Peel the brinjals. 2. Heat sesame oil in a pan, add mustard, black gram, curry leaves and let to splutter. Then add little bit asafoetida powder. Then add chopped onion and garlic and saute well. Then add peeled brinjals along with water and allow medium flame to boil. 3. When the vegetables half cooked, add tamarind juice, salt and sambar powder. When the curry starts boiling, add ground coconut paste. Allow 10 minutes to boil and remove from flame. Brinjal tamarind sauce is ready to taste. |
||||||||
by kowshika on 16 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|