LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

பச்சைப்பயிறு குழம்பு (Green Dal curry)

தேவையானவை :


பச்சைப்பயிறு - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)

பூண்டு - 10 பல் (நறுக்கியது)

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ் ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1/2 டீஸ் ஸ்பூன்

புளி - எலுமிச்சை அளவு

தக்காளி - 1 பெரியது

பெருங்காயம் - 2 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

சீரகம் - 1/2 டீஸ் ஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ் ஸ்பூன்



செய்முறை :


1. வெறும் வாணலியில் பச்சைப்பயிறை வாசனை வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரில் நன்றாக அலசி கழுவிக் கொள்ளவும். குக்கரில் கழுவிய பச்சைப்பயிறு, பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம், மிளகுத்தூள், சிறிது எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து, இவையனைத்தும் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். 

2.குக்கரில் ஐந்து விசில் வந்தவுடன் இறக்கவும்.பிறகு வெந்த பச்சைப்பயிற்றில் புளியைச் சேர்த்து மத்தைக் கொண்டு நன்றாகக் கடையவும்.பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பெருங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு வறுத்து, இதனுடன் கடைந்து வைத்துள்ள பச்சைப்பயிறு மசியலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.குழம்பு கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

Green Dal Curry

Ingredients for Green Dal Curry:

  

Green Gram-100 G

Small Onion-10 (Chopped)

Garlic-10 Flakes (Chopped)

Black Gram-1/2 Tsp

Bengal Gram-1/2 Tsp

Tamarind-Lemon Size

Tomato-1 Big Size

Asafoetida-2 Pinch

Salt-as Needed

Pepper Powder-1/2 Tsp

Green Chilly-1

Cumin-1/2 Tsp

Oil-2 Tsp

Mustard-1/2 Tsp

 

Procedure to make Green Dal Curry:

1. In an empty pan, add green gram and fry till the smell subsides. Then wash the dhal in water.  In a cooker, add green gram, garlic, onion, tomato, green chilly, cumin, pepper powder and oil. Then add water and cover the cooker.

2. Allow 5 whistles and remove from flame. Then add tamarind together with boiled dhal and mash them finely. Heat oil in a pan, add mustard, black gram, Bengal gram and let to splutter and then add asafetida, dry chilly, curry leaves, mashed dhal, water, salt and let to boil. When the curry comes thick consistency, remove from flame and serve it.

by suganya   on 18 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.