LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

கொத்தவரங்காய் புளிக் குழம்பு (Kothavarangai Tamarind Curry)

தேவையானவை :


கொத்தவரங்காய் - 1 கப் (நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1 (பொடித்தது)

தக்காளி - 1 (பொடித்தது)

புளி - சிறியது

தேங்காய்த் துருவல் - சிறிது

உப்பு - தேவையான அளவு

மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்

மஞ்சள்தூள் -   1/2 டீ ஸ்பூன்

எண்ணெய் - சிறிது

கடுகு - 1/4 டீ ஸ்பூன்

உளுந்து - 1/4 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து


செய்முறை:


1.புளியை சிறிது தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.சூடான எண்ணெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்துப் பொரிக்கவும்.பின் இதனுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் தக்காளியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

2.தக்காளி வதங்கியதும் நறுக்கிய கொத்தவரங்காய், மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த் தூள் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.புளிக் கரைசலையும், சிறிது தேங்காய்த் துருவலையும் காயுடன் சேர்க்கவும்.காய் வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் குக்கரை மூடி வைக்கவும்.முதல் விசில் வந்தபின் அனலைக் மிதமான தீயில்  7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.பின் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி காயுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்துக் கலக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Kothavarangai Tamarind Curry

Ingredients for Kothavarangai Tamarind Curry:

 

Kothavarangai-1 Cup (Chopped)

Large Onion-1 (Chopped)

Tomato-1 (Chopped)

Tamarind-Little

Grated Coconut-Little

Salt-as Needed

Chilly Powder-1 Tsp

Turmeric Powder-1/2 Tsp

Oil-Little

Mustard-1/4 Tsp

Black Gram-1/4 Tsp

Curry Leaves-1 Bunch

 

Procedure to make Kothavarangai Tamarind Curry:

 

1. Soak tamarind in water. In a cooker, add oil, mustard, black gram, curry leaves and let to splutter. Then add chopped onion and tomatoes and fry for few minutes.

2. Then add chopped kothavarangai, turmeric powder and sambar powder. Add tamarind juice and grated coconut. Then add water and cover the pan to boil. Allow 1 whistle and allow medium flame for 7 minutes to boil well. Remove the cooker from flame and add salt to taste and serve it. 

by kowshika   on 16 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.