LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

வெண்டைக்காய் புளிக்குழம்பு (Ladies Finger Tamarind Sauce)

தேவையானவை;


வெண்டைக்காய் - கால் கிலோ (பெரிய துண்டுகளாக நறுக்கியது)

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

மிளகாய் வற்றல் - 4

கருவேப்பிலை - சிறிது

சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)

தக்காளி - 100 கிராம் (நறுக்கியது)

வெந்தயம் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 3 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரைஸ்பூன்

தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்

புளி - சிறிய எலுமிச்சை அளவு



செய்முறை :


1.மிக்ஸ்சியில் தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து வைக்கவும்.புளி கரைத்து கொள்ளவும்.முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,வெந்தயம்,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்,அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.


2.மேலும் அதனுடன் நறுக்கிய வெண்டைக்காய்,சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும்,வெண்டைக்காய் வதங்கியதும் தனியாக எடுத்து வைக்கவும்.அதே கடாயில் நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்


3.கலவையில் மசாலா வாசனை அடங்கியதும் புளிக்கரைசல் விட்டு கொதிக்க விடவும்.தனியே வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்க்கவும்.வெண்டைக்காய் சேர்த்து நன்கு கொதிவரும், மூடி போட்டு ஐந்து நிமிடம் மிதமான நெருப்பில் வைக்கவும்.பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்,குழம்பு கெட்டி தன்மைக்கு தகுந்தபடி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்,உப்பு சரிபார்க்கவும்.சிமிதமான தீயில் வைத்து தேங்காய் வாடை மடங்கி அடுப்பை அணைக்கவும்.விரும்பினால் ஒரு டேபிள்ஸ்பூன் நல்ல எண்ணெயில் இரண்டு வற்றல் சிவற வறுத்து கொட்டி இறக்கவும்.

Ladies Finger Tamarind Sauce

Ingredients for Ladies Finger Tamarind Sauce :


Ladies Finger - 1/4 Kg(Chopped),

Oil - 4 Tbsp,

Mustard - 1 tsp,

Salt - as needed,

Dry Chilies - 4,

Curry Leaves - little,

Small Onion - 100 g(Chopped),

Tomato - 100 g(Chopped),

Fenu greeks - 1 tsp,

Coriander Powder - 3 Tsp,

Chilli Powder - 1-1/2 TSp,

Turmeric Powder - 1/2 Tsp,

Coconut - 3 Tbsp,

Dry Gram - 1 Tsp,

Tamarind - Small Lemon Sized.


Method to make Ladies Finger Tamarind Sauce :


1. Grind the coconut and dry gram in a mixi. Liquefy the tamarind and keep aside. Heat oil in a frying pan then add mustard, fenugreeks,dry chilies, curry leaves and saute it well. Then add chopped onions along with it and fry them well. 

2. Then add chopped ladies finger and add some salt and allow it to fry well. If ladies finger get boiled keep it aside. Then heat oil in a pan and fry the tomatoes then add coriander powder, chilli powder,turmeric powder and fry it well. Add a cup of water and boil it well. 

3. When the masala smells out then add tamarind extract in it and stir it well. Then add fried ladies finger then close the pan and boil it for 5 minutes. Then add coconut paste and add water and boil it till it turns dense. 


Ladies Finger Tamarind Sauce is ready to eat.

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.