LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் !!

சமையலுக்கு சுவையும், மனமும் ஏற்படுத்துவது தாளிக்கும் முறை தான். தாளிப்பின் ராணி எனப்படுவது கறிவேப்பிலை. வீடுகளில் சமையல் செய்யும் போது கறிவேப்பிலையை எண்ணையில் போட்டுத் தாளிப்பார். அப்போது ஒரு வித நறுமணம் வீடு முழுவதும் பரவும். நாம் சாப்பிடும் போது குழம்பு அல்லது கூட்டுகளில் கறிவேப்பில்லை கிடந்தால் அதனை எடுத்து கீழே போட்டு விடுகிறோம். அது தவறு. இந்த கறிவேப்பிலையைச் சாதரணமாக நினைக்க வேண்டாம். மனிதனின் உடலுக்கு பல நன்மைகளை தரும் மருந்துவ குணமும் உடையது என்கிறார்கள் மருத்துவர்கள்.


முராயா கோயனிகி என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட கறிவேப்பிலை இந்தியா, அந்தமான் தீவுப் பகுதிகளை பிறப்பிடமாகக் கொண்டது. இது இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உணவு மற்றும் பணப்பயிராக பயிரிடப் பெற்று வருகிறது.


கறிவேப்பிலையில் 60 சதவீதம் நீர் சத்தும், 6.9 சதவீதம் புரதச் சத்தும், 5 சதவீதம் தாது உப்புக்களும், 6.3 சதவீதம் நார்ச் சத்தும் உள்ளன. இதிலுள்ள கோயினிகள் என்ற வேதிப் பொருள் தான் மனம் ஏற்படுவதற்கு காரணம். தயாமின், நிகோடினிக் அமிலம் போன்ற வைட்டமீன்களும் கறிவேப்பிலையில் உள்ளன.


கறிவேப்பிலையில் இலைகள், வேர், வேர்ப்பட்டை என அதன் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணம் உடையவை. இதனுடைய மருத்துவப் பயன்கள் நம்மை வியக்க வைக்கின்றன. கறிவேப்பிலையை எடுத்து அதனுடன் தேங்காய் துண்டுகள், உப்பு, புளி சேர்த்து அரைத்து துவையல் செய்து சாப்பிடால் வயிற்றிலுள்ள வாயுவை வெளியேற்றும். பசியைத் தூண்டும் தன்மையும் இதற்கு உண்டு,


சிறிதளவு கறிவேப்பிலையுடன் கஸ்துரி மஞ்சள், கசகசா பட்டை போன்றவற்றை சேர்த்து அரைத்து அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகளில் தேய்த்து வந்தால் தழும்புகள் மறையும்.


கறிவேப்பிலை இலையில் சிறிது நீர் சேர்த்து சங்கைக் கொண்டு அரைத்து முகப்பருவில் தடவி வந்தால் பருக்கள் மறையும். தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி நோய் குணமாகும்.


தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலை இலைகளை போட்டு கற்பூரத் துண்டு சிறிது சேர்த்து பாட்டிலில் ஊர வைத்து பின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கருப்பாக இருப்பதுடன், உடலில் உள்ள பித்தம், கிறுகிறுப்பு போன்ற நோய்களும் மறையும்.


கறிவேப்பிலை இலைகளை மென்று தின்று வந்தால் வயிற்றுப் போக்கு குணமடையும்.

by Swathi   on 17 Feb 2014  10 Comments
Tags: Curry Leaves   Curry Leaves Benefits   Curry Leaves Tamil   Curry Leaves Uses   Karuveppilai Uses in Tamil   Karuveppilai Uses   Karuveppilai Benefits  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மருத்துவ குணங்கள் பல நிறைந்த கறிவேப்பில்லை !! மருத்துவ குணங்கள் பல நிறைந்த கறிவேப்பில்லை !!
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் !! கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் !!
கருத்துகள்
08-Nov-2017 11:51:51 senthil kumar said : Report Abuse
super message super message
 
09-Jan-2017 20:47:34 சரண் said : Report Abuse
முடி வளர்ச்சி உடம்பு மற்றும் மனம் தொடர்புடையது. கருவேப்பிலை சிறிது உதவி பண்ணும். உடம்பு விருக்கு சத்துள்ள ஆகாரம் உன்ன வேண்டும். மனதிற்கு நல்ல எண்ணம் வளர்த்து கொள்ளவேண்டும்
 
16-Oct-2016 07:53:41 kalirathinam said : Report Abuse
இட் வாஸ் குட்
 
04-Oct-2016 07:52:47 B . kabil said : Report Abuse
Massive 😊😊😊
 
17-Jun-2016 22:18:25 tamil said : Report Abuse
Hair dandraff and hairfall ku curry leaves use panlama plz tell me
 
14-Jan-2016 00:49:17 rizvana said : Report Abuse
Karuveppillai sapduvathaal udambu karuppaga maaruma?
 
30-Dec-2015 09:38:59 moorthy said : Report Abuse
முடி கொட்டாமல் இருப்பதற்கும் , வெள்ளை முடி கருப்பாக இருக்கவும் எப்படி பயன் படுத்த வேண்டும் .சொல்லுங்க ப்ளீஸ் சொல்லுங்க சார் ........
 
10-Jun-2015 01:59:20 Vimal said : Report Abuse
mudi kottamal erupatharku karuveppilai yepadi payanpadutha vendum pls tel
 
07-Nov-2014 01:21:47 Ramavathi said : Report Abuse
கருவேப்பிலை அரைத்து தேங்கா எண்ணையில் கலந்து காச்சி தலையில் தடவினால் முடி வளருமா plz சொல்லுங்க
 
28-Oct-2014 10:14:52 kasamusa said : Report Abuse
sfsgghgn
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.