|
||||||||
மோர்க்குழம்பு (Moru Curry) |
||||||||
தேவையானவை : மோர் - 2 கப் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் பச்சைமிளகாய் - 2 தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணை - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 1 பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - 1 இனுக்கு சீரகம் - 1/2 டீஸ்பூன் அரிசி - 1/2 டீஸ்பூன் துவரம் பருப்பு - 1 டீஸ்பூன் தனியா - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி அகியவற்றை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 2.ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி அத்துடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், உடனே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் கொட்டவும். |
||||||||
Moru Curry | ||||||||
Ingredients for Moru Curry:
Beaten Milk-2 cup Turmeric Powder-1/4 tsp Green Chilly-2 Grated Coconut-2 Tbsp Oil-1 Tsp Mustard-1/2 Tsp Dry Chilly-1 Asafoetida-1 Pinch Curry Leaves-1 Bunch Cumin-1/2 Tsp Rice-1/2 Tsp Red Gram-1 tsp Coriander-1 Tsp Salt-1 Tsp
Procedure to make Moru Curry:
1. Take a vessel, add red gram, coriander, cumin and rice and soak for 15 minutes. Then drain the water, add along with grated coconut and green chilly and grind them well. 2. Pour the beaten curd in a vessel along with grinded paste, turmeric powder and salt. Mix well and allow to boil on flame. When starts boiling, remove from flame. Heat oil in a pan, add mustard, dry chilly, asafoetida, curry leaves and let to splutter and then put in to moru curry.
|
||||||||
by rakavi on 19 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|