|
||||||||
கிராமத்து பச்சை மொச்சை குழம்பு (Village Green Field Beans Curry) |
||||||||
தேவையானவை : பச்சை மொச்சை -- 1/2 கிலோ எண்ணெய் - 3 டீ ஸ்பூன் சின்ன வெங்காயம் - 100 கிராம் கடுகு, உளுந்து - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 குழம்பு தூள் - இரண்டு டீஸ் ஸ்பூன் தக்காளி - 3 தேங்காய் விழுது - அரை கப் கறிவேப்பிலை - ஒரு கொத்து செய்முறை : 1.சிறிதளவு உப்புடன் பச்சை மொச்சை,வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் சிறிது எண்ணைய் ஊற்றி சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, குழம்பு தூள் சேர்த்து வதக்கவும். அத்துடன் தேங்காய் சேர்த்து வதக்கி மொத்தமாக அரைக்கவும். 2.அதே வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். மீதமுள்ள சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும், தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும். இத்துடன் அரைத்த கலவையை போட்டு வதக்கவும். இந்த கலவையில் வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையெனில் உப்பு சேர்க்கலாம். 3.குழம்பு கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி அடுப்பை மிதமாக தீயில் எரிய விடவும். குழம்பு பதத்திற்கு வந்த உடன் இறக்கவிடவும். |
||||||||
Village Green Field Beans Curry | ||||||||
Ingredients for Village Green Field Beans Curry:
Green Field Beans-1/2 Kg Oil-3 Tsp Small Onion-100 G Mustard, Black Gram-1/2 Tsp Green Gram-2 Sambar Powder-2 Tsp Tomato-3 Coconut Paste-1/2 Cup Curry Leaves-1 Bunch
Procedure to make Village Green Field Beans Curry:
1. Boil the dhal along with salt, onion and green chilly. Heat oil in a pan, add small onion, curry leaves, sambar powder and saute well. Then add coconut and grind them finely. 2. Heat oil in a pan, add mustard, black gram, curry leaves and let to splutter. Then add remaining onion and saute well. Add tomato and fry till it comes pulpy. Then add ground paste and boiled dhal and let to boil along with water. 3. When starts boiling, add 1 tea spoon of sesame oil and allow medium flame. When the curry comes thick consistency remove from flame.
|
||||||||
by suganya on 18 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|