LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கறிவகை (Non Veg Karivakai)

சிக்கன் சாப்பீஸ் (chicken chappies)

தேவையானவை:


கோழி – 1/2 கிலோ

வெங்காயம் – 1/2 கிலோ

தக்காளி – 2

பச்சை மிளகாய் –  6

மல்லி கீரை – 1கட்டு

எலுமிச்சை பழம் – பாதி

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

கரம் மசாலாத் தூள் – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1சிட்டிகை

இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்

எண்ணெய் – 100 மில்லி

உப்பு – 1 டீஸ்பூன்


செய்முறை:


1.முதலில் கோழி கறியில் மிளகாய்த்தூள், மசாலாத்தூள், மஞ்சள் தூள், பாதி இஞ்சி பூண்டு விழுது, பாதி உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக புரட்டி 1/2 மணி நேரம் ஊறவிடவும்.

2.பிறகு வெங்காயத்தை நறுக்கிக்கொண்டு, தக்காளி, பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.

3.ஒரு கடாயில் பாதி எண்ணெய்விட்டு, மசாலாவில் ஊறிய கோழியை சற்று முறுகலாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

4.மீதி எண்ணெயை இன்னொரு கடாயில் விட்டு, மீதி இஞ்சி பூண்டு விழுதை போட்டு முறுக ஆரம்பிக்கும்போது நறுக்கிவைத்துள்ளவற்றை போட்டு லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.

5.பிறகு பொரித்துவைத்துள்ள கோழியை அதில் போட்டு புரட்டி, மீதி உப்பை சேர்த்து கிளறி, அதன் மேல் மல்லி கீரயை நைஸாக அரிந்துப்போட்டு மீண்டும் புரட்டி,

6.இறக்கும் முன் எலுமிச்சை பழத்தை பிழிந்து புரட்டிவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

by akashaya   on 05 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.