LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- கறிவகை (Veg Karivakai)

துபாய் பூசணிக்காய் கறி (dubai poosanikai curry)

தேவையானவை:


துபாய் பூசணிக்காய் (பெரியது) - ஒன்று

நறுக்கிய பச்சைமிளகாய் - ஒன்று

உப்பு - தேவையான அளவு

கடுகு - அரை டீஸ்பூன்

பெருஞ்சீரகம் - அரைடீஸ்பூன்

எண்ணெய் - 3டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

நறுக்கிய வெங்காயம் - அரைப்பாதி

மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

மெட்ராஸ் கறித்தூள் - சிறிதளவு

மஞ்சள்தூள் - சிறிதளவு

பூண்டு - 2 பல்

இஞ்சி (விழுது) - சிறிதளவு

பால் - தேவையான அளவு

அஜினோமோட்டோ - கால் டீஸ்பூன்

எலுமிச்சம்பழச்சாறு - சிறிதளவு


செய்முறை:


1.துபாய் பூசணிக்காயின் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டவும்.

2.பின்பு அடுப்பில் கடாயை வைத்து  எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

3.பிறகு கடுகு வெடித்ததும் அதில் நறுக்கியவெங்காயத்தை போட்டு பொரிய விடவும்.

4.வெங்காயம் ஓரளவு பொரிந்ததும் அதில் பெருஞ்சீரகம்(சோம்பு), நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய பூண்டு,இஞ்சி விழுது ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

5.தாளித்த பின்பு வெட்டி கழுவிய பூசணிக்காய் துண்டுகளை அதில் போட்டு வதக்கவும்.

6.ஓரளவு வதக்கிய பின்பு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மெட்ராஸ் கறித்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து அவியவிடவும்.

7.பூசணிக்காய் ஓரளவு அவிந்ததும் அதனுடன் பால், கறிவேப்பிலை, உப்பு, அஜினோமோட்டோ ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் அவியவிடவும்.

8.பின்பு அதனுடன் எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்றாக கலந்து சிறிது நேரத்தின்பின்பு சுவையான துபாய் பூசணிக்காய் கறி தயாராகி விடும்.

by akashaya   on 05 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.