|
||||||||||||||||||
க்ரீன் ஃபிஷ் கறி (green fish curry) |
||||||||||||||||||
தேவையானவை: மீன் - 300 கிராம் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் உப்பு - 2ஸ்பூன் வெங்காயம் - 1 மிளகாய் - 5 பூண்டு - 2 பல் தேங்காய் துருவல் - 2ஸ்பூன் முந்திரிபருப்பு - 6 எண்ணெய் - 4ஸ்பூன் சீரகம் - 1/4ஸ்பூன் சீரகத்தூள் - 1/2ஸ்பூன் தனியாத்தூள் - 1/2ஸ்பூன் பெருஞ்சீரகத்தூள் - 1/2ஸ்பூன் தயிர் - 1/4 கப் தண்ணீர் - 1 கப் கொத்தமல்லி இலை- சிறிது செய்முறை : 1.முதலில் மீனை தோல் உரித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். 2.ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் வைத்திருக்கவும். 3.பிறகு மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கொத்தமல்லி இலை, முந்திரி, தேங்காய், பூண்டு, மல்லித் தூள், சீரகம், பெருஞ்சீரகத்தூள் ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். 4.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். பின்பு அரைத்து வைத்திருக்கும் விழுதினை போட்டு நன்கு வதக்கவும். 5.அதன் பிறகு சிறிது தண்ணீர் மற்றும் மல்லி இலை சேர்த்து கொதிக்க விடவும். 6.அதில் தயிரை ஊற்றி கலக்கி விடவும்.ஊற வைத்திருக்கும் மீனை இந்த கலவையில் போட்டு பிரட்டி விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.சுவையான க்ரீன் ஃபிஷ் கறி ரெடி. |
||||||||||||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|