|
||||||||||||||||||
கனேடியன் சிக்கன் கறி (kanadiyan chicken curry) |
||||||||||||||||||
தேவையானவை: சிக்கன் -அரைக்கிலோ பெரிய வெங்காயம்-ஒன்று பூண்டு-இரண்டுபற்கள் நறுக்கிய தக்காளி- ஒரு ஒன்று பால்- அரை கப் சோளமாவு-இரண்டு டீஸ்பூன் ரெடி மேட் கறி பவுடர்-இரண்டு டீஸ்பூன் பட்டையின் தூள்-அரை டீஸ்பூன் பிரிஞ்சி இலை-இரண்டு நறுக்கிய பார்ஸ்லி- கால்கப் உலர்ந்த ஏப்ரிகாட்பழம்-நறுக்கியது கால்கப் உலர்ந்த பைனாப்பிள்-கால்கப் சிக்கன் ஸ்டாக்- ஒன்றரைக் கப் கனோலா ஆயில்- இரண்டு டேபிள் ஸ்பூன் உப்புத்தூள்-ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள்-அரை டீஸ்பூன் செய்முறை: 1.சிக்கனின் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2.ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி காயவைத்து வெங்காயம் பூண்டைப் போட்டு வதக்கவும். தொடர்ந்து சிக்கனைப் போட்டு நன்கு வதக்கவும். 3.பிறகு எல்லாத்தூளையும் போட்டு தக்காளியையும் உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும். 4.பிறகு பழங்களைப் போட்டு சிக்கன் ஸ்டாக்கையும் ஊற்றி நன்கு கலக்கி விட்டு கொதிக்க விடவும். 5.பிறகு அரைமணிநேரம் கழித்து பாலில் சோளமாவை கரைத்து குழம்பில் ஊற்றி நன்கு கலக்கி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். 6.அதன் பிறகு நறுக்கிய பார்ஸ்லி தழைய்யை மேலாகப் போட்டு சூடாகப் பரிமாறவும். |
||||||||||||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|