|
||||||||
வெண்டைக்காய் கறி (ladies finger curry) |
||||||||
தேவையானவை: வெண்டைக்காய் – 1/2 கிலோ புளி – நெல்லிக்காய் அளவு மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப பெருங்காயம் – 1/4 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன் வெல்லம் – சுண்டைக்காய் அளவு எண்ணெய் – 4 டீஸ்பூன் மிளகாய் வற்றல் – 4 செய்முறை: 1.வெண்டைக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். 2.புளியைக் கெட்டியாகக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் கலந்து கொள்ளவும். 3.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், தாளித்து நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும். 4.கொஞ்சம் வதங்கியதும் புளிக்கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி வைக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|