|
||||||||
காளான் மசாலா (mushroom masala) |
||||||||
தேவையானவை: பச்சை பட்டாணி – ஒரு கப் காளான் – ஒரு பாக்கெட் வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று கரம் மசாலா – அரை டீஸ்பூன் தயிர் – அரை கப் இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி – 10 கசகசா – 2 டீஸ்பூன் எண்ணெய் – 4 டீஸ்பூன் உப்பு-சிறிது செய்முறை ! 1.முதலில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். முந்திரி, கசகசாவை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். 2.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். 3.பின் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கி தக்காளியை போட்டு நன்கு கரையும் வரை வதக்கவும் . 4.பிறகு கரம் மசாலா, அரைத்த முந்திரி விழுது, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். 5.பிறகு வேக வைத்த பட்டாணி, காளான் சேர்த்து 3 நிமிடம் வேக வைக்கவும் . 6.காளான் வெந்த பின் தயிர் சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்.பின்பு சூடாக பரிமாறவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|