|
||||||||
வாழைக்காய் புட்டு ( bananai puttu) |
||||||||
தேவையானவை: வாழைக்காய்- 2 உப்பு-தேவையான அளவு காயம்- சிறிதளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் கடுகு- 1 டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன் மிளகாய் வற்றல்- 3 கறிவேப்பிலை- 6 இலைகள் செய்முறை : 1. ஒரு பாத்திரத்தில் வாழைக்காய் துண்டுகள் மூழ்குமளவிற்கு தண்ணீரை வேக வைக்கவும். 2. வாழைக்காய் ஓரங்களைச் சிறிது நறுக்கி விட்டு 2 துண்டுகளாக நறுக்கி வென்னீரில் போடவும். 3. வாழைக்காய் பாதி வெந்தும் வேகாத பதத்தில் எடுத்து ஆற விடவும். வாழைக்காய் சூடு ஆறினவுடன் தோலைச் சீவி விட்டு வாழைக்காய்ப்புட்டு அரிப்பில் துருவிக் கொள்ளவும். 4. கடாயில் எண்ணெய் இட்டு கடுகு, வெள்ளைஉளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிசம் செய்து கொண்டு. வாழைக்காய் துருவியதைப் போட்டு உப்பு போட்டு வதக்கவும். 5. காயம் போட்டு நன்றாகக் கிளறி விடவும். புட்டு வெந்தவுடன் உப்பு சரி பார்த்து பரிமாறவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|