|
||||||||
காய்கறி பிரட்டல் (vegetable pirattal) |
||||||||
தேவையானவை :- காரட் - 2 பீன்ஸ் - 15 உருளைக்கிழங்கு - 2 காலிஃப்ளவர் - 6 துண்டு பட்டாணி - 1/2 கப் பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 வெள்ளைப் பூண்டு - 4 பல் உப்பு - 1/2 டீஸ்பூன் அரைக்க :- வரமிளகாய் - 4 சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் தேங்காய் - 2 இஞ்ச் துண்டு பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 2 பூண்டு - 1 பல் உளுந்து - 1/ டீஸ்பூன் சோம்பு - 1/4 டீஸ்பூன் கல்பாசிப்பூ - 1 இன்ச் துண்டு பட்டை - 1 இன்ச் துண்டு கருவேப்பிலை - 1 இணுக்கு. எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் செய்முறை :- 1.முதலில் காய்கறிகளை கழுவி தோல் சீவி சதுரங்களாக வெட்டி அரை வேக்காடாய் வேகவைத்துக் கொள்ளவும். 2.பிறகு மசாலாவை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சோம்பு., பட்டை., கல்பாசிப்பூ தாளிக்கவும். 3.பின்பு வெங்காயம்., தக்காளி., பூண்டு போட்டு வதக்கவும். மசாலாவைப் போட்டு பக்கங்களில் எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். உப்பு போடவும். 4.வெந்த காய்களைப் போட்டு மசாலா சேரும்வரை கலக்கவும் . வேகவைத்து இறக்ககி பரிமாறவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|