LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- கறிவகை (Veg Karivakai)

பச்சை காய்கறி மசாலா (vegetables in green masala)

தேவையானவை:


கத்திரிக்காய் - 3

அவரைக்காய் - 5

பீன்ஸ் - 6

குடமிளகாய் - 1

பச்சை பட்டாணி - 1/2 கப்

வெண்டைக்காய் - 4

வெங்காயம் - 1

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

இஞ்சி - ஒரு சிறு துண்டு

பூண்டுப்பற்கள் - 3

பச்சை மிளகாய் - 3

கொத்துமல்லித்தழை - சிறிது

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணை - 2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது


செய்முறை:


1.எல்லா காய்களையும் 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

2.வெண்டைக்காயைத் தவிர மற்ற காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீரை விட்டு வேக விடவும்.

3.ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டு, சற்று வதக்கிக் கொள்ளவும். சிறு தீயில் வைத்து வதக்கினால், காயும் வதங்கும், நிறமும் மாறாது.

4.பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை, தேங்காய் ஆகியவற்றை, தண்ணீர் சேர்க்காமல், சற்று கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

5.ஒரு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன், வெந்த காய்கள் அனைத்தையும் போட்டு, உப்பையும் சேர்க்கவும்.

6.ஓரிரு வினாடிகள் நன்றாகக் கிளறி விடவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டுக் கிளறவும்.

7.அடுப்பை சிறு தீயில் வைத்து, ஈரப்பசை போகும் வரை வதக்கி இறக்கி வைக்கவும்.

by akashaya   on 05 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.