LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

சீதா பழத்தின் 10 மருத்துவ குணங்கள் !!

'கஸ்டட் ஆப்பிள்'(Custard Apple) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. 


சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன. இந்தகைய சத்துக்கள் அடங்கிய சீதாபழத்தின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போம்.


சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்.


குழந்தைகளுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும், பல்லும் உறுதியாகும்.


சீத்தாப்பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.


சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.


சீத்தாப்பழ விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.


சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும்.


சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.


சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. 


சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. 


சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது

by Swathi   on 13 Mar 2014  10 Comments
Tags: Custard Apple   Custard Apple Benefits   Custard Apple Health   Seetha Palam   Seetha Palam Benefits   Seetha Palam Uses   Mullu Seethapazham  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சீதா பழத்தின் 10 மருத்துவ குணங்கள் !! சீதா பழத்தின் 10 மருத்துவ குணங்கள் !!
கருத்துகள்
15-Oct-2019 07:25:57 அசோக் குமார் said : Report Abuse
நன்றி
 
31-Aug-2019 04:12:40 Ragavi said : Report Abuse
Super Mikka nandri
 
15-Aug-2019 08:25:03 பாலகிருஷ்ணன் said : Report Abuse
சீத்தாபழத்தின் இலை சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அரு மருந்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது இதை எப்படி சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டும் எந்த முறையில் சாப்பிடவேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும்
 
21-Oct-2017 09:49:09 புருஷோத்தமன் said : Report Abuse
மாலை வணக்கம் சார், நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருகிறேன். உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதா உள்ளது. தாங்கள் இதனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பணிவாக கேட்டு கொள்கிறேன். நன்றி.
 
20-Jul-2017 10:56:07 Sarasuvathylogeshwaran said : Report Abuse
Seetha leaf good fr cancer ah
 
08-Jun-2016 06:52:10 முத்துகுமரன் said : Report Abuse
நல்ல கருதுகல்லுகு நன்றி
 
02-Sep-2015 07:04:34 Majith said : Report Abuse
Super
 
31-Jul-2015 07:14:45 abirami said : Report Abuse
மிக மிக அற்புதமான மருத்துவ தகவல்கள் :)
 
06-Apr-2015 23:48:45 ஜாகீர் ஹுசைன் said : Report Abuse
இதுபோன்று அறிய தகவல்களை தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி
 
14-Mar-2014 05:40:13 வேலப்பன் k said : Report Abuse
மிஹவும் அருமையான தஹவல். நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.