LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

டேட்டிங் என்பதற்கு சரியான தமிழ் சொல் என்ன தெரியுமா ?

டேட்டிங் என்பதற்குத் தமிழ் வார்த்தை தேவைப்படுகிறது என்று நண்பரின் பதிவொன்று காணப்பட்டது. அதற்கு நான் ‘களவளாவல்’ என்ற சொல்லை முன்மொழிந்தேன். அந்தப் புதுத்தொடரில் உள்ள களவு என்ற வார்த்தை ‘திருட்டு அல்லது தவறான நடத்தை’ சார்ந்த அவப்பொருள் தருகிறதோ என்று சிலர்க்குத் தயக்கம். டேட்டிங் என்பது ஆணும் பெண்ணும் கலந்து பழகி அறிகின்ற இளம்பருவச் செயல். அச்செயலைக் குற்றமாகவோ தீதாகவோ பொருளுணர்த்தாதபடி தமிழ்ச்சொல் அமையவேண்டும்.
இதில் களவு என்பது என்னவென்று நான் விளக்கவேண்டியிருக்கிறது. களவு என்பதைத் திருட்டு என்ற பொருளில் புரிந்துகொள்ளவேண்டியதில்லை. காதல் வாழ்க்கையைக் களவு, கற்பு என்று இருவகையாய் வகுப்பர் தமிழர். இங்கே களவு என்பது பிறர் அறியாத நடத்தை. அதைக் களவொழுக்கம் என்பர்.
களவொழுக்கம் கற்பொழுக்கம் இரண்டையும் ஒரே நேர்க்கோட்டில் அடுக்கி அமைத்ததிலிருந்தே இரண்டின் முக்கியத்துவத்தையும் உணரலாம். களவில் தலைவனும் தலைவியும் தம்மை ஊரார் அறியும்முன் சந்தித்துப் பழகுவர். உறவும் இருக்கலாம். அளாவுதல் என்பதற்குக் ‘கலத்தல், சென்று பொருந்துதல், கலந்து பேசுதல்’ ஆகியன பொருள்கள். களவு + அளாவல் = களவளாவல்.
நான் ஆயிரம் முறைகள் சொல்லிவிட்டேன் - ‘தமிழில் ஒருசொல்லுக்குப் பல பொருள்கள்... ஒரு பொருளுக்குப் பல சொற்கள். அதனால் களவளாவல் என்கிறேன்.
கிராமப்புறத்தில் ஒருவனைக் களவாணி என்பார்கள். ‘அவன் சரியான களவாணிப் பயலாச்சே...’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார்கள். இங்கே என்ன அர்த்தம் ? அவன் வீடுகள்தோறும் திருடியவனா ? அப்படித் திருடியிருந்தால் அவனைக் கட்டிவைத்து அடிக்கமாட்டார்களா ? திருடனாயிருந்தால் எடுத்த எடுப்பில் ‘திருடன் சார்... அவன் அயோக்கியப் பயலாச்சே...’ என்பார்கள். ஆனால் இவர்கள் சிரித்துக்கொண்டே கூறும் களவாணியில் அந்த அர்த்தம் இல்லை. அவன் நிறைய மறைபொருள்கள் உடையவன். யார்க்கும் தெரியாமல் எதையாவதொன்றைச் செய்கின்றவன். அது அவனுடைய களவு நடத்தை. அதனால்தான் அவன் களவாணி.
தமிழ்சார்ந்தோ இலக்கணம்சார்ந்தோ எதையும் எழுதுவதற்குமுன் பன்முறை சிந்திக்கிறேன். ஒன்றுக்குப் பத்துக் கணினிச் சாளரங்களைத் திறந்து தரவுகளைச் சரிபார்க்கிறேன். என்னைச்சுற்றிலும் இலக்கணப் பெருநூல்களும் அகராதிகளும் கண்டபடி இறைந்துகிடக்கின்றன. நான் அலைபேசியில் முகநூல் திறப்பதில்லை. அங்கங்கே கிடைக்கும் இடைவெளியில் எழுதுவதில்லை. தம்முன் உள்ள அத்தனை கட்டுப்பாடுகளும் கருவிகளும் உதவுவதால் ஒருவர் எத்தனை நம்பிக்கையுடன் விமானத்தை இயக்குகிறாரோ, அந்த நிலைமையில்தான் நான் மொழிசார்ந்து எழுதுகிறேன். ஐயம் தோன்றியவுடன் என் பெயரைக் கோத்துவிடுகிறார்கள். அந்த அறிவிப்பைக் கண்ணுற்று உரிய உழைப்பைச் செலவிட்டுத்தான் என் பதிலைச் சொல்கிறேன். ஏனோதானோ நிலைமை என்றால் ஐந்தாறு நாள்களுக்குக்கூட ஒன்றும் எழுதாமல் அமைதி காப்பானேயன்றி இங்கே வெற்று வரிகள் ஒன்றுகூட எழுதப்படமாட்டாது ! 
- கவிஞர் மகுடேசுவரன்

டேட்டிங் என்பதற்குத் தமிழ் வார்த்தை தேவைப்படுகிறது என்று நண்பரின் பதிவொன்று காணப்பட்டது. அதற்கு நான் ‘களவளாவல்’ என்ற சொல்லை முன்மொழிந்தேன். அந்தப் புதுத்தொடரில் உள்ள களவு என்ற வார்த்தை ‘திருட்டு அல்லது தவறான நடத்தை’ சார்ந்த அவப்பொருள் தருகிறதோ என்று சிலர்க்குத் தயக்கம். டேட்டிங் என்பது ஆணும் பெண்ணும் கலந்து பழகி அறிகின்ற இளம்பருவச் செயல். அச்செயலைக் குற்றமாகவோ தீதாகவோ பொருளுணர்த்தாதபடி தமிழ்ச்சொல் அமையவேண்டும்.

இதில் களவு என்பது என்னவென்று நான் விளக்கவேண்டியிருக்கிறது. களவு என்பதைத் திருட்டு என்ற பொருளில் புரிந்துகொள்ளவேண்டியதில்லை. காதல் வாழ்க்கையைக் களவு, கற்பு என்று இருவகையாய் வகுப்பர் தமிழர். இங்கே களவு என்பது பிறர் அறியாத நடத்தை. அதைக் களவொழுக்கம் என்பர்.

களவொழுக்கம் கற்பொழுக்கம் இரண்டையும் ஒரே நேர்க்கோட்டில் அடுக்கி அமைத்ததிலிருந்தே இரண்டின் முக்கியத்துவத்தையும் உணரலாம். களவில் தலைவனும் தலைவியும் தம்மை ஊரார் அறியும்முன் சந்தித்துப் பழகுவர். உறவும் இருக்கலாம். அளாவுதல் என்பதற்குக் ‘கலத்தல், சென்று பொருந்துதல், கலந்து பேசுதல்’ ஆகியன பொருள்கள். களவு + அளாவல் = களவளாவல்.

நான் ஆயிரம் முறைகள் சொல்லிவிட்டேன் - ‘தமிழில் ஒருசொல்லுக்குப் பல பொருள்கள்... ஒரு பொருளுக்குப் பல சொற்கள். அதனால் களவளாவல் என்கிறேன்.

கிராமப்புறத்தில் ஒருவனைக் களவாணி என்பார்கள். ‘அவன் சரியான களவாணிப் பயலாச்சே...’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார்கள். இங்கே என்ன அர்த்தம் ? அவன் வீடுகள்தோறும் திருடியவனா ? அப்படித் திருடியிருந்தால் அவனைக் கட்டிவைத்து அடிக்கமாட்டார்களா ? திருடனாயிருந்தால் எடுத்த எடுப்பில் ‘திருடன் சார்... அவன் அயோக்கியப் பயலாச்சே...’ என்பார்கள். ஆனால் இவர்கள் சிரித்துக்கொண்டே கூறும் களவாணியில் அந்த அர்த்தம் இல்லை. அவன் நிறைய மறைபொருள்கள் உடையவன். யார்க்கும் தெரியாமல் எதையாவதொன்றைச் செய்கின்றவன். அது அவனுடைய களவு நடத்தை. அதனால்தான் அவன் களவாணி.

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 26 Nov 2014  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
23-Oct-2016 23:43:47 அர்ஜுனன் யுவராஜன் said : Report Abuse
Dating- என்ற ஆங்கில வார்த்தைக்கு களவளாவுதல்- என்று திரு மகுடேசுவரன் பரிந்துரைத்துள்ளார்.நன்றி! ஆனால் நாம் வாழ்வது நவீன காலம்; இங்கே களவு/கற்பு விளக்கங்கள் ஏற்கப்படுமா? என்பது ஐயம்! மேலும் 'டேட்டிங் ' மேற்கத்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு;கூடுதலாக பாலியல் தொடர்புகளுக்கு வழி நடத்தக்கூடியது.நம் மரபு வழி களவு/கற்பு தொடர்புகள் திருமண நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டது.பருவ வயதினர் ஒருவரை ஒருவர் ,பிறர் தலையீடின்றி,பேசி,பழகி,புரிந்து கொள்ள குறிப்பிட்ட ஒரு நாளை நிச்சயித்துக்கொள்வதை களவளாவுதல் என்று குறிப்பிடுவதைவிட "மறை அளாவுதல்" என்றோ அல்லது "தனியளாவுதல்" என்றோ அல்லது"பழகு நாள்" என்றோ குறிப்பிடுவது சரியானதாக இருக்கும் என்பது தாழ்மையான கருத்து.நன்றி
 
02-Dec-2014 14:36:33 பூபதி said : Report Abuse
Soooper
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.