LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

டெலவரில் தமிழக விவசாயிகளுக்கான ஆதரவுப் போராட்டம்..

மார்ச் 19: டெலவரில் தமிழக விவசாயிகளுக்கான ஆதரவுப் போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் குளிரிலும், பனியிலும் மண்டையோடு ஏந்தி, அரை நிர்வாணமாய், சாலைகளில் படுத்து இன்னும் பல வழிகளில் தொடர் போராட்டம் நடத்தினார்கள்! ஆனால் மத்திய, மாநில அரசுகள் அவர்களைக் கவனிக்கவே இல்லை! அவர்களைத் தவிர வேறுயாரும் அவர்களுடன் களத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் படுப்பதற்கு இடமில்லாமல் சீக்கியர்களின் குருத்துவாராவில் தூங்குவதாகவும், உணவிற்கு சரியான வழியின்றி இருப்பதாகவும் செய்திகளின் மூலமாகத் தெரிந்தது. அவர்கள் படும் இன்னல்களைப் பார்க்கும் போது சோகமும், கோபமும், இயலாமையும் மனதை வாட்டியது!

அதனால் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக  அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவர் மாநிலத்தில் தமிழ் நண்பர்களால் மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4:00 மணிக்கு வில்மிங்டன் நகரில் உள்ள ரிவர் ஃப்ரன்டில்(Chase Center on the Riverfront)ஒரு ஆதரவுப் போராட்டம் நடத்தப்பட்டது.

குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் பெருமளவில் டெலவர் தமிழ் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு மறுநாள் திங்களன்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களும்,  மத்திய அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்களும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியுள்ளார்கள். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, சாதகமான முடிவு வரும் வரை டெல்லியிலேயே தங்குவதாக முடிவு செய்துள்ளார்கள்.

உழவர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு ஏற்படாமல் டெல்லியில் போராட்டம் தொடரும் பட்சத்தில், இன்று டெலவரில் நடைபெற்ற இந்தப் போராட்டம் ஒரு முன்னுதாரனமாய் அமைந்து, அமெரிக்காவின் பிற பகுதியிலுள்ள தமிழர்களையும் அவர்கள் இருக்கும் நகரங்களில் ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுக்கத் தூண்டுகோலாய் அமையும் என்று நம்புவோம்.

வெல்லட்டும்  விவசாயிகள்  போராட்டம்!

 

 To wach the videos: 

 -ரமா ஆறுமுகம் 

by Swathi   on 22 Mar 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலக அமைதி மராத்தான்   ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர்  சுரேஷ் உலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் .. வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது  மாநாட்டில்  5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்.. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..
அமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது.. அமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..
வட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்.. வட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..
வடஅமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டது. வடஅமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டது.
கனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு! கனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு!
அமெரிக்காவின்  (Loudoun County Public Library)லவுடன் பகுதி  அரசு நூலகங்களில் தமிழ் நூல் சிறப்பு பகுதிக்கு 523  தமிழ்நூல்கள் வழங்கப்பட்டன... அமெரிக்காவின் (Loudoun County Public Library)லவுடன் பகுதி அரசு நூலகங்களில் தமிழ் நூல் சிறப்பு பகுதிக்கு 523 தமிழ்நூல்கள் வழங்கப்பட்டன...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.