ஆறாவது ஐ.பி.எல் தொடரின் லீக் ஆட்டத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் டாசில் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நார்வால் 23 ரன்களை சேர்த்தார். பின்னர் களமிறங்கிய டேர்டெவில்ஸ் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வென்றது. வார்னர் அதிகபட்சமாக 62 ரன், சந்த் 37 ரன் குவித்தனர். ஆட்ட நாயகனாக வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.
|