LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உயிரைக் கொல்லும் டெங்கு , அதன் பின்புலம் என்ன? தப்புவது எப்படி? சித்தமருத்துவர், பேராசிரியர் கோ.அன்புகணபதி, P.hd.

டெங்கு காய்ச்சல்(Dengue Fever) தமிழகத்தில் பல இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை அறிகிறோம். இதற்கு என்ன செய்வது என்று நம் சித்த மருத்துவர்  கோ.அன்புகணபதி, P.hd அவர்கள் விரிவாக விளக்குகிறார்.

டெங்கு காய்ச்சல் எதோ ஒரு நாட்டிலிருந்து வந்ததல்ல. வெப்ப மிதவெப்ப நாடுகளில் பல ஆண்டுகளாக இந்த டெங்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது .

 அறிகுறிகள்(Dengue Fever Symptoms):

 

  • உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும் 104F வரை கூட இருக்கும்.
  • முதல் மூன்று நாட்கள் ஜுரம், உடல் வலி, உடலில் சிவப்பு நிற திட்டுகள் ஏற்படும். குறிப்பாக கண்ணுக்கு பின்புறம் இருக்கும் பகுதியில் வலி இருக்கும். வாந்தி வரும்.  இரத்தப்பரிசோதனை மேற்கொண்டு டெங்குதானா என்று அறிந்துகொள்ளலாம்.

இது எப்படி பரவுகிறது:  

  • டெங்கு காய்ச்சல் ஒரு வித கொசு(Aedes Aegypti) மூலம் வருகிறது .

 எச்சரிக்கை: மூன்று நாட்கள் ஜுரம் இருந்து சரியாகிவிட்டது என்று அசட்டையாக இருந்துவிடாமல், அதன் பிறகும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எந்த நேரத்திலும் உடல்நிலை பாதிப்படையலாம், அப்படி ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும். ஜுரம் வந்தால் உடன் மருத்துவரை சந்திக்கவும்.

எப்படி பாதுகாப்பது?: நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடாமல் நல்ல உணவு, சுகாதாரத்துடன் கூடிய வாழ்விடம் ஆகியவை அவசியம்.  நல்லத் தண்ணீரில் இந்தக் கொசு வாழ்கிறது. இது சாக்கடையில் இருக்கும் கொசு இல்லை. வீட்டில் சமையலைறையில், வீட்டில் பெயின்ட் டப்பாக்களில், தண்ணீர் தொட்டிகளில் , மற்ற வீட்டில் தேங்கியுள்ள தண்ணீரில் வாழ்கிறது.  பகல் நேரத்தில் கடிக்கும் கொசுவாக இது  இருக்கிறது. இரவில் ஓய்வெடுக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.  இந்த கொசுவின் முட்டைகள் தண்ணீர் இல்லாமல் திறந்த வெளியில் இருந்தாலும் அந்த முட்டைகள் 300 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கும். மழை போன்ற நல்ல தண்ணீர் பட்டவுடன் இது உயிர்பெறும். ஒரு டெங்கு வைரஸ் கொண்ட கொசுவின் முட்டைகள் அனைத்தும் டெங்கு வைரசுடன் இருக்கும். எனவே டெங்கு பாதிப்பிற்கு ஆளான ஒருவரிடமிருந்துதான் பரவ வேண்டும் என்பதில்லை. நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு கடிக்காமலும் , பரவாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நிலவேம்பு குடிநீர்(Nilavembu Kudineer):

 

இதற்கு சித்தமருத்துவ   நிலவேம்பு குடிநீர் குடிப்பது நல்லது. நிலவேம்பு என்பது ஒரு மூலிகை அல்ல, அது  ஒன்பது மூலிகைகளைக் கொண்ட ஒரு பொடி வடிவில் இருக்கும்.  இதை கலக்கித்தான் நிலவேம்பு குடிநீர் என்று குடிக்கிறோம் .  ஆங்கில மருத்துவரையும் அணுகி தேவையான இரத்த சோதனைகள் செய்வது உள்ளிட்டவற்றை செய்து மக்கள் சித்த மருத்துவமும், ஆலோபதியும் சேர்ந்த ஒருங்கிணைந்த முறையை கடைபிடிப்பது பலன்தரும்.

இது குறித்த விரிவான காணொளியை ஒவ்வொருவரும் பார்த்து பயன்பெறவும், உங்கள் நண்பர்கள் , உறவினர்களுக்கு பகிர்ந்துகொள்ளவும். 

by Swathi   on 14 Oct 2017  0 Comments
Tags: Dengue Kaichal   Dengue Kaichal Arikurigal   Dengue Kaichal Marunthu   டெங்கு காய்ச்சல்   டெங்கு காய்ச்சல் சித்த மருத்துவம்   டெங்கு மருந்து   டெங்கு காய்ச்சல் மருத்துவம்  
 தொடர்புடையவை-Related Articles
முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சிகிச்சையும் சேர்ப்பு!! முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சிகிச்சையும் சேர்ப்பு!!
உயிரைக் கொல்லும் டெங்கு , அதன் பின்புலம் என்ன? தப்புவது எப்படி?  சித்தமருத்துவர், பேராசிரியர் கோ.அன்புகணபதி, P.hd. உயிரைக் கொல்லும் டெங்கு , அதன் பின்புலம் என்ன? தப்புவது எப்படி? சித்தமருத்துவர், பேராசிரியர் கோ.அன்புகணபதி, P.hd.
டெங்குக் காய்ச்சல் – ஒரு பார்வை டெங்குக் காய்ச்சல் – ஒரு பார்வை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.